பக்கம் எண் :

224பாரதம்ஆரணிய பருவம்

மலையொத்த,திண் தோள் - வலிய தோள்களையுடைய,வாள் அரக்கன் -
(சந்திரகாசமென்னும்) வாட்படையையுடைய இராட்சதனாகியஇராவணன்,
குலத்தோடுஉம் - குலத்துடனே, மடிய - இறந்திடுமாறு, முன்னம் - முன்பு,
வில்கொண்டு - (கோதண்டமென்ற) வில்லினால்,சரம் தொடுத்து - அம்பை
எய்து, புரைஇல் கேள்வி விண்ணவர்தம் துயர் தீர்த்த-குற்றமற்ற
நூற்கேள்வியையுடைய தேவர்களின் துன்பத்தைப் போக்கியருளிய, வீரம்
ராமன்-வீரகுணத்தைக் கொண்ட ஸ்ரீராமனுடைய, கல் கொண்ட அகலியை
கல்வடிவத்தைப் பெற்ற அகலிகை, தன் உருவம் - நிஜவடிவத்தை, மீள -
மறுபடியும், கவின்கொள்ள - அழகுபொருந்தப்பெறுமாறு, கொடுத்த-, திரு
கமலம் பாதம் - சிறந்த தாமரைமலர் போன்ற திருவடிகளை,சொல்கொண்டு
- சொல்லினால்,துதித்து-புகழ்ந்து, (அங்ஙனம் புகழ்வதனாலான
களிப்பினால்),எழுந்து துள்ளி - துள்ளியெழுந்து, நாள்உம்-பிரதிதினமும்,
தொழுமவர்ஏ - தொழுபவர்களே, எழு பிறவி - ஏழுவகைப்பட்ட
பிறவிகளிலே, துவக்கு-சம்பந்தம், அற்றார்-நீங்கினவராவர்;(எ - று.)

     ஸ்ரீராமனதுதிருவடிகளைப்புகழ்ந்து துள்ளியெழுமவர், அகலிகை
சாபவிமோசனம்பெற்று நிஜவடித்தை யடைந்தாற்போல, தமக்கு நேர்ந்துவரும்
பிறவித்துயர் நீங்கி மீளாவுலகமாகிய நற்கதி சேர்வரென்பதாம்.
ஸ்ரீராமனுடைய கமலபாதத்துக்கு அகலியை தன்னுருவமீளக் கவின்கொள்ளக்
கொடுத்த, என்ற அடைமொழி கொடுத்தது, கருத்துடையடைமொழியாம்.
ஆன்மாவிற்கு வரக்கூடிய ஏழுபிறவிகளாவன - தேவர் மக்கள் விலங்கு புள்
ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என இவை.

     இதுமுதல் இருபதுகவிகள் - பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சிர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்கு கொண்ட எண்சீராசிரிய விருத்தங்கள்.                      (338)

2.-கவிக்கூற்று: அருச்சுனன் இந்திரனருகிலினிதிருப்ப,
தருமன் ஆரணியத்திற்புரிந்ததைக் கூறுவோ மெனல்.

இப்பால்வெஞ்சிலைவிசயன்றுறக்கமீதிலிந்திரன்றனருகிருப்பவி
                                    மையோரூரில்,
அப்பானற்றவம்புரியுந்தழல்கூர்வேள்வி யந்தணர்தங்
                         குழாஞ்சூழவழகார்மண்ணில்,
ஒப்பாருமிலாதமடமயிலினோடுமுயர்வனத்தினிடை
                             நாளுமொருநாள்போலத்,
தப்பாமலறம்வளர்க்கும்நீதி வேந்துத்தம்பியரும் புரிந்ததினிச்
                                    சாற்றுகிற்பாம்.

     (இ-ள்.) வெம்சிலைவிசயன் - கொடிய வில்லையுடையஅருச்சுனன்,
இப்பால் - இங்கு, துறக்கம்மீதில்-விண்ணுலகில்,-இமையோர்ஊரில் -
தேவர்களின் வாழிடமான அமராவதிநகரில், இந்திரன்தன் - இந்திரனுடைய,
அருகு - சமீபத்திலே, இருப்ப - இராநிற்க,-அப்பால்- அங்கு, அழகு ஆர்
மண்ணில் - அழகுநிரம்பிய பூலோகத்தில், நல் தவம் புரியும் - சிறந்த
தவத்தைச் செய்பவர்களாய், தழல் கூர் வேள்வி அந்தணர்தம் -
அக்கினிமிகுதியாக