எரிகின்ற யாகங்களைப்புரியும் பிராமணர்களுடைய, குழாம் - கூட்டம், சூழ - சூழ்ந்திருக்க,-மடம்மயிலினோடுஉம்மயில்போன்ற சாயலையுடையளான திரௌபதியுடனே, உயர் வனத்தினிடை - பெரு வனத்தினிடையிலே, நாள்உம் - பிரதிதினமும், ஒருநாள்போல-,தப்பாமல்- தவறாமல்,அறம் வளர்க்கும் - தருமத்தை நடத்துகின்ற, ஒப்பு ஆர்உம் இலாத-ஒத்தவராக எவரையும் பெறாமையையுடைய,நீதிவேந்துஉம் - நியாயநெறி தவறாத யுதிட்டிரமகாராஜனும், தம்பியர்உம்-,புரிந்தது - செய்ததை, இனி-, சாற்றுகிற்பாம் - சொல்வோம்;(எ-று.) அருச்சுனன்சுவர்க்கலோகத்தில் அமராவதிநகரில் இந்திரனருகிலே இனிதிருப்ப, பூலோகத்திலே யுதிட்டிரன் தருமபத்தினி திரௌபதியுடனே யிருந்து இல்லறத்தை ஒருநாள் நடத்துவது போலவே எந்நாளும் தவறாது நடத்துபவனாய்த்தம்பியரோடும் செய்த செயல் இனிக் கூறப்படுமென்பதாம். வேள்வியில் அவிசினால்அக்கினி மிகவும் வளர்க்கப்படு மாதலால், 'தழல் கூர்வேள்வி'என்றது. விசயனின்பமெய்தி என்றும், புரிந்துஎன்றும் பிரதிபேதம். (339) 3.-யுதிட்டிரன்அருச்சுனனைப்பிரிந்த வருத்தத்தோடு சிந்தனைகொண்டுதம்பியருடனிருக்கையில் ரோமசமுனிவன் அங்குவந்தடைதல். விறல்விசயன்றனைப்பிரிந்தவருத்தமேன்மேல்விஞ்சவொருதஞ் சமறவெம்பியம்பொன், சிறகிழந்தபறவையெனத்துணைவரோடுந்திறல்வேந்தன் சிந்தனையுற்றிருந்தகாலைப், பொறையறிவுநிறைதரும முடையவாய்மைப்போர்வேந்தேயஞ் சலெனப்புகழ்ந்துவாழ்த்தி, மறையொருபொன்வடிவுகொடுவந்ததென்ன மாமுனியுமிமைப்பினி டை வந்துற்றானே. |
(இ-ள்.) விறல் விசயன்தனை- வலிமையுள்ள அருச்சுனனை,பிரிந்த வருத்தம்-,மேல்மேல் விஞ்ச-,ஒரு தஞ்சம் அற-(அந்த வருத்தத்தைப் போக்கும்) பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல், வெம்பி - மனங்கன்றி, அம் பொன் சிறகு இழந்த பறவை என- அழகிய பொன்போலருமையான சிறகையிழந்த பறவையைப்போல, துணைவரோடுஉம்- (அருச்சுனனையொழிந்தவீமன் முதலிய) தம்பிருடனே, திறல் வேந்தன் - வலிமையையுடைய யுதிட்டிராசன், சிந்தனைஉற்று - சிந்தனைகொண்டு, இருந்த காலை-இருந்தபோது,-மாமுனிஉம் - (உரோமசனென்ற) சிறந்த முனிவனும்,-'மறைஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன-வேதமே ஒரு அழகிய வடிவத்தை யெடுத்துக்கொண்டு வந்ததென்று கருதுமாறு, பொறை அறிவு நிறை தருமம் உடைய வாய்மை - பொறுமையும் அறிவும் நிறைந்த தருமமும் உடைமையாகக்கருதும் சத்தியமும் ஆகிய இவற்றையுடைய, போர்வேந்தே - போர்செய்யவல்ல அரசனே! அஞ்சல் - (அருச்சுனனைப் பிரிந்த வருத்தத்தால்) அஞ்ச வேண்டா,'என - என்று சொல்லியவண்ணம், புகழ்ந்து வாழ்த்தி- |