பக்கம் எண் :

226பாரதம்ஆரணிய பருவம்

(அந்தத் தருமனைத்)துதித்து வாழ்த்துக்கூறி,-இமைப்பினிடை-இமைக்கும்
நேரத்திற்குள், வந்துஉற்றான்- (சுவர்க்கலோகத்திலிருந்து தருமனிருக்கும்
வனத்துக்கு) வந்து சேர்ந்தான்;(எ-று.)

     'விசயன்செய்தியையெல்லாம் தருமனுக்கு உரைத்தி'என்று
தேவேந்திரன் கூறியவுடனே, தாமதமின்றி அந்த உரோமசமுனிவன்
தருமனிருக்குமிடம் வந்து, அப்போது அத்தருமன் சிந்தனையைமுகத்தில்
தேக்கி யிருந்ததனால்அஞ்சலென்று தேற்றிப் புகழ்ந்து வாழ்த்தின னென்க.
புகழ்ந்து வாழ்த்தி வந்துற்றான்என்ற இடத்து விகுதிபிரித்துக் கூட்டி,
வந்துற்றுப் புகழ்ந்து வாழ்த்தினனென்னலாம்: இனி, வரும்போதே
தருமனைப்புகழ்ந்து வாழ்த்தியவண்ணம் அம்முனிவன் வந்தானென்பார்
இவ்வாறு கூறினாரென்பாருமுளர். இமைப்பினுடன் என்றும் பாடம்.(340)

4.-வந்தமுனிவனைத்தருமன் முதலியோர் வணங்க,
அம்முனிவன் ஆசிகூறிஇருக்கையி லமர்தல்.

வந்தபெருங்கடவுண்முனிவரவுநோக்கி வாள்வேந்துந்தம்பியரு
                                  மகிழ்ச்சிகூர்ந்து,
சிந்தைவிழிமலரொடுபேருவகைபொங்கச் சென்றெ திர்
                      போய்வணங்தலுஞ்சிதைவிலாத,
அந்தமுனிவரனுமவர்க்கன் பாற்றுன்பமணுகாத
                              வந்தமிலாவாசிகூறிப்,
புந்தியுடனளித்தசெழும் புனிதகோலப்
           புலித்தவிசினிருந்தடைவேபுகன்றானெல்லாம்.

     (இ-ள்.) வந்த-,பெருங் கடவுள் முனி - பெருமைபெற்ற
தெய்வத்தன்மையுள்ள உரோமசமுனிவனது, வரவு - வருகையை, நோக்கி -
பார்த்து,-வாள் வேந்துஉம் - வாட்படையையுடையயுதிட்டிர ராசனும்,
தம்பியர்உம் - தம்பிமாரான வீமன் முதலியோரும், மகிழ்ச்சிகூர்ந்து -
மகிழ்ச்சி மிகுந்து,-சிந்தை- மனத்திலும், விழி மலரொடு-மலர்போன்ற
கண்களிலும், பேர் உவகை மிக்கமகிழ்ச்சி, பொங்க - அதிகரிக்க, சென்று -
நடந்து, எதிர்போய் - (அம்முனிவனுக்கு) எதிராகப்போகி, வணங்குதலும் -
வணங்கினவுடனே,-சிதைவு இலாத - அழிவில்லாத, அந்த முனிவரன்உம் -
அந்த உரோமசனென்ற இருடிச்சிரேட்டனும், அவர்க்கு-அந்தப்
பாண்டவர்க்கு, அன்பால் - மனப்பிரீதியோடு, துன்பம் அணுகாத -
துன்பம்சேராத, அந்தம் இலா - அளவில்லாத [மிகப்பல],ஆசி-
வாழ்த்துக்களை,கூறி-சொல்லி,-புந்தியுடன்-மனப்பூர்வமாக,அளித்த-
(தருமன்) கொடுத்த, செழும் புனிதம் கோலம் புலி தவிசின்-சிறந்த
பரிசுத்தமான அழகிய புலித்தோலாசனத்தில், இருந்து-,அடைவே-,
எல்லாம்-,புகன்றான்-;(எ-று.)

     உரோமசமுனிவன்அடைவேபுகன்றவை இவை யென்பது மேலிற்
செய்யுளில் விளங்கும்.  அருச்சுனனது பிரிவினால்பாண்டவர்க்குக்
காமியவனவாசம் இன்னாதாக,தருமன் தம்பியருடன் அங்குநின்றும்
அப்பாற்செல்ல நிச்சயித்துத் தௌமியமுனிவனிடம் தெரிவித்துக்கொள்ள,
அம்முனிவன் பல புண்ணிய தீர்த்தங்களையும்ஆச்சிரமங்களையும்
கூறாநிற்கையில்லோமசமுனிவன்