| முரைத்தருள்கவெனவும்பர்கோமானுன்பால், என்னைவிடுத்தனன்வந்தேனென்றானெல்லாவுலகு முடிந்திடுநாளுமீறிலாதான். |
(இ-ள்.)தனஞ்சயன் - அருச்சுனன், தன் அருகுஏ - தனது சமீபத்திலிருந்து, அமரர்எலாம் - தேவர்கள் யாவரும், இனிது போற்ற - இனிமையுறத் துதிக்க, அங்கு - அத்தேவலோகத்தில், இருந்ததன் பின் - சிலகாலந் தங்கியிருந்தபிறகு,-தயங்கும்சோதி-விளங்குகின்ற ஒளியையும், மன்னும் எழில்-பொருந்திய அழகையுமுடைய, காந்தர்ப்பம் என்னும் நாமம் வரை வழிஏ - காந்தர்ப்பமென்று போர்கொண்ட மலையின்வழியாக, வருவதுஉம் - (திரும்பிப் பூலோகத்துக்கு) வரப்போவதையும்,-மருவுகாதல் - (அவ்வருச்சுனனிடம்) பொருந்திய அன்பையுடைய, உன்னுடைய-, பெருந்துயரம் - (அவ்வருச்சுனனுடைய பிரிவினாலாகிய)மிக்க துன்பம், தணியும் ஆறுஉம் - ஆறியிருக்குமாறும், உரைத்தருள்க - சொல்வாயாக, என - என்று சொல்லி, உம்பர்கோமான் - தேவேந்திரன், உன்பால் - உன்னிடத்து, என்னை-,விடுத்தனன்-அனுப்பினான்: (அதனால்), வந்தேன்-,என்றான்- என்று (தான்) வந்த வரலாற்றைக் கூறினான்: (யாவனென்னில்),-எல்லாஉலகுஉம் முடிந்திடும் நாள்உம் ஈறு இலாதான் - உலகம்யாவும் அழிந்திடும் பிரளய காலத்தும் தனக்கு இறுதிவரப் பெறாதவனானஅந்த ரோமசமுனிவன்;(எ-று). அருச்சுனன்தான் எந்தக் கருத்தோடு சென்றானோஅந்தக் கருத்து முற்றி முன்னிலும் பலமடங்கு மேன்மை பெற்றுள்ளானாதலால்,அந்நிலையை நினைந்துநீ துயரம் தவிர்ந்து நிற்க என்று உன்னிடம் சொல்லுமாறு என்னைவிடுத்தானென்பது,'உன்னுடையபெருந்துயரந்தணியுமாறு முரைத்தருள்க'என்றதன் கருத்து. தணியுமாறும் என்ற உம்மை-விடயம் விளங்குமாறு கூறுவதன்றி என்று எச்சப்பொருளைத்தரும்: இனி, இசை நிறையாகவுமாம். (343) 7.-நான்குகவிகள்-முனிவன்மொழியால் பாண்டவர் வருத்தமாறிப்புறப்பட்டு, உரோமசன்காட்டப் பலதீர்த்தங்களிலும்நீராடிக் காந்தர்ப்பமலையில்தங்குதல் கூறும். மாமுனிதன்மொழிகேட்டுப்புரையில்கேள்வி மன்னவனுந்தம்பி யரும்வருத்தமாறிக் காமியமென்றுரைபெறுசீர்வனத்தைநீங்கிக்கட வுண்முனி தன்னோடுங்கணத்தினேகி, நாமமதுகரதீர்த்தமுதலா வுள்ளநற்றீர்த்தமெவற்றினும் போய்நானமாடித், தாமமதிதவழ்சிகரத் திந்த்ரகீலசயிலத்தின்சுனைகெழுதண் சாரல்சார்ந்தார். |
(இ-ள்.) மாமுனி தன் - சிறந்த உரோமச முனிவனுடைய, மொழி- வார்த்தையை, கேட்டு-,புரை இல் கேள்வி - குற்றமற்ற நூற்கேள்வியையுடைய, மன்னவன்உம்-யுதிட்டிரராசனும், தம்பியர்உம்- தம்பிமார்களும், வருத்தம் மாறி-(தம்) வருத்தந்தணிந்து,- |