பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்23

     (இ-ள்.) (அம்மலையினிடத்தில்), சாரணர்-சாரணர்களும், இயக்கர் -
யக்ஷர்களும், விச்சாதார் - வித்தியாதரர்களும், முதல்-முதலான, பலர் உம் -
பலவகையாரும், -செல் சொல் ஆரணம்படிஏ-சத்தியானசொற்களையுடைய
வேதங்களிற்கூறிய விதிப்படியே, சூழ - சுற்றிலும், அடவிகள் தோறுஉம் -
காடுகளிலெல்லாம், வைகி-தங்கியிருந்துகொண்டு, -நாரணன்-திருமாலும்,
மலரோன் -(அத்திருமாலின் நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும்,
உம்பர்நாயகன்-தேவர்களுக்குத் தலைவனாகிய பரம சிவனுமாகிய
இம்மூவருடைய, பதங்கள்-திருவடிகளை, நச்சி-(கொள்கைக்கு ஏற்ப) விரும்பி,
காரணம் தவம் செய்வோரை-(தாந்தாம்பெற விரும்பிய பேற்றிற்கு) ஏதுவான
தவதைச் செய்பவர்களை, கண்டு கண்டு-மிகுதியாக பார்த்து, உவகை
கூர்ந்தான்-களிப்பு மிகுந்தான்; (எ-று.)

     இனி, இக்கவியில் பின் இரண்டடிக்கு-விஷ்ணு பிரம இந்திரர்களுடைய
பதவிகளைத் தாம் பெற விரும்பி (ப் பரமசிவனைக் குறித்து) க் காரணம்
முதலிய ஆகமங்களிற் கூறியவாறு தவம்புரிவோர்களைக் கண்டு
களித்தானென்று உரை கூறுவாரு முளர்: நாரணன்=நாராயணன்: இச்சொல் -
நார அயந எனப் பிரிந்து, சகலசிருஷ்டிப்பொருள்களுக்கும் இருப்பிடமானவ
னென்றும், சமுத்திரத்தைத்தனக்கு இடமாகக்கொண்டவனென்றும் பொருள்படும்.
நாரணன் மலரோனும்பர் நாயகன் பதங்கள்-திருமாலினுடைய ஸ்தாநமாகிய
வைகுண்டமும் பிரமனுடைய ஸ்தாநமாகிய சத்தியலோகமும் மகாதேவனுடைய
ஸ்தாநமாகிய ருத்திரலோகமும் என்று கூறுதலும் ஒன்று. சாரணர் முதலியோர்,
பதினெண் தேவகணத்தைச் சேர்ந்தவர். சூழ்ந்த வடவிகடோறும் என்றும்பாடம்.
                                                           (32)

33.-அருச்சுனன் கைலாசகிரியைச் சேர்தல்.

அரியும்வெங்கரியுந்தம்மிலம்புரிமுழக்கங்கேட்டுங்
கிரியினின்முழக்கங்கேட்டுங்கிராதர்போர்முழக்கங்கேட்டு
மெரிகிளர்முழக்கங்கேட்டுமெம்பிரானிமவான்றந்த
புரிகுழலோடும்வைகும்புண்ணியப்பொருப்பைச்சேர்ந்தான்.

     (இ-ள்.) அரிஉம் - சிங்கங்களும், வெம்கரிஉம் - கொடிய
மதயானைகளும், தம்மில் - தங்களுக்குள் (னற்றோடொன்று), அமர் புரி -
போர் செய்கின்ற, முழக்கம் - பேரொலியை, கேட்டுஉம் - கேட்டுக்கொண்டும்,
கிரியினின் முழக்கம் கேட்டுஉம் - (அவ்வொலிக்கு எதிராக)
அவ்விமயமலையிலெழுகின்ற ஓசையைக் கேட்டுக்