இந்திரனுக்குமேகத்தை வாகனமாகக் கூறுதல், புராணங்களின் கொள்கை. முடி என்பது, மயிர்முடியப்படுவதென்னுங் காரணம்பற்றித் தலைக்கும்,அதிலணியப்படுதல்பற்றி ஆகுபெயராய்க் கிரீடத்துக்கும் பெயராம். இங்கே, முடி - கிரீடம். வனசம்-வநஜம்;நீரிற் பிறப்பதென்று காரணக்குறி. வியாசபாரதத்தில் இம்மலரைக் குறிக்குமிடத்து 'ஸௌகந்திகம்' என்றும், 'பத்மம்'என்றும் கூறப்பட்டுள்ளது: இத்தொடர்கட்கு - தாமரையினத்தைச் சேர்ந்த செங்கழுநீர் மலரென்று ஒரு சாராரும், நல்லமணமுடைய தாமரையென்று மற்றொருசாராரும் பொருள் கூறுகின்றனர். ஆதலால், இப்பாடலிலுள்ள வனசம் என்பதற்குத் தாமரையென்று பிரசித்தமாயுள்ள பொருளைவிட்டு,124, 125-ஆம் பாடல்களால் முறையே "பொற்றருநண்பின் வழங்கி"என்றும், "அண்ணற் றருப்பெற்ற பின்"என்றும் வருவதற்கு ஏற்ப, 'வனசம்- வனத்திலுண்டாகும் கேட்டுப்பூ'என்று பொருளுரைத்தல் சிறவாதெனத் தோன்றுகின்றது; இந்நூலில் 84-ஆம் பாடலில் "கந்தவான்பொழிலும் நன்னீர்க்கடிமலர்த்தடமும்"என்று வருவதும், 138-ஆம் பாடலில் "வாவிச் செழுந்தாமமலர்நல்கி"என்று வருவதும், 'நீர்ப்பூ'என்று கொள்ளவேண்டு மென்பதனையேவற்புறுத்தும்: ஆதலால், 124, 125-ஆம் பாடல்களிலுள்ள தரு என்பது - மலர்க்கொடியையே காட்டுமென்று கொள்ளுதலே ஏற்கு மென்க. கனகமுடிமேல் வனச மலர் என்பதற்கு - சுவர்க்கலோகத்திலுள்ள பூப்போன்ற பூஎன்று கருத்துக்கொள்ளினுமாம். மை முகில் வாகனன் கனக முடிமேல் வனசம் என்பது - இந்திரனது முடிமேலுள்ள வனசம் என்றவாறு. மயில் - ஆகுபெயர். முன் - இடமுன். செய்ய - குறிப்புப் பெயரெச்சம்.(348) 12.-அம்மலரைக்கண்டுமனத்தினாற்போற்றியதிரௌபதி வீமனுக்குக் காட்டிச்சொல்லலுறுதல். இந்தமலருலகனைத்துமீன்றகோலவெழின்மலரோவிரவிதிருக் கரத்தில்வைகும், அந்தமலரோவமுதிற்பிறந்தபாவை யமர்ந்துறையு மணிமலரோவவனிதன்னில், எந்தமலருங்கருகக்கமழாநின்ற தெங்கெங்குமிதன் மணமேயென்றுபோற்றிக், கந்தவகன்மைந்தனுக்குக்கன லோனல்குங் கனங்குழைசென்று வகையுடன்காட்டிச்சொல்வாள். |
(இ-ள்.)'இந்தமலர்-,உலகு அனைத்துஉம்ஈன்ற கோலம் எழில் மலர் ஓ - உலகமுழுவதையும் உண்டாக்கிய மிக அழகிய (திருமாலின் நாபித்) தாமரைமலரோ? இரவி திரு கரத்தில் வைகும் அந்த மலர் ஓ - சூரியனுடைய கையிலிருக்கின்ற அந்த மலர்தானோ? அமுதின் பிறந்த பாவை அமர்ந்து உறையும் அணி மலர் ஓ-திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் மனம் விரும்பி வாழ்கின்ற அழகிய அந்த மலர்தானோ? அவனி தன்னில் - பூமியிலேயுள்ள, எந்த மலர்உம் - எந்த தாமரைப்பூவும், கருக - (தனக்கு முன்னே) கருகித் தோன்றும்படி, எங்கு எங்குஉம் - எல்லாவிடத்தும், இதன் மணம்ஏ கமழாநின்றது-இந்த மலரின் நறுமணமே வீசாநின்றது', |