பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்233

என்று போற்றி -என்று (அதன் நறுமணங் குறித்துச் சிந்தித்துக்)
கொண்டாடி,-கனலோன்நல்கும் கனம்குழை-அக்கினியினால்
தரப்பெற்றவளும் பொற்குழையுடையவளுமான திரௌபதி,-உவகையுடன்
சென்று - (அபூர்வமான மலரைக்கண்டதனாலான)வியப்புடனே போய்,
கந்தவகன் மைந்தனுக்கு - காற்றின் குமாரனானவீமசேனனுக்கு, காட்டி -
(அம்மலரைக்) காட்டி, சொல்வாள்-(பின்வருமாறு) கூறுபவளானாள்;(எ-று.)-
அதனைமேற்கவியிற் காண்க.

     சிறப்புற்றதிருமாலினுந்தித்தாமரை, செங்கதிரோன்கரத்துத் தாமரை,
திருமகளுறையுந்தாமரை என்ற இவைகள் தெய்த்தாமரைமலர்களாதலால்,
திரௌபதி தன்முன்வீழ்ந்த வனசமலரை, அவற்றோடொக்குமென்று
கருதினாள். 'எந்தமலருங்கருக'என்றதனால்,இந்த மலரின்
நறுமணத்துக்குமுன் மற்றை மலரின் மணம் கருகித் தோன்றுமென்று
இலக்கணைவழக்காகக்கூறியதென்க: இனி, அம்மலரின் செந்நிறத்தைக்
குறித்தபடியுமாம்.  அமுது-பாற்கடலுக்கு, இலக்கணை.கந்தவ்ஹன்-
நறுமணத்தைத்தாங்குபவன்: காற்றுக்குக் காரணக்குறி. கனங்குழை-
அன்மொழித்தொகை.                                      (349)

13.-திரௌபதிஇதையொத்தமலரைத்தருக என்று வீமன்
கையிற் கொடுக்க,அவன் அதுகுறித்து உரோமசனை
வினவுதல்.

இம்மலருக்கொருமலருமவனிதன்னி லெதிரில்லையென்றிதழா
                                  யிரத்தின்மிக்க,
அம்மலரைக்கைம்மலரிற்கொடுத்தீதொக்கு மணி
                  மலர்நீயெனக்கருளவேண்டுமென்னச்,
செம்மலையிற்றிகழ்சிகரத்திண்டோள்வீமன் றெய்வமுனி
                     புங்கவன்றன்றிருத்தாள்போற்றி,
மெய்ம் மலரைத்திருமுன்புவைத்துநின்றுவினவினானவனு
                             மெதிர்விளம்புவானே.

     (இ-ள்.) இமலருக்கு ஒரு மலர்உம் அவனிதன்னில் எதிர் இல்லை
என்று - 'இந்தப்பூவுக்குஒரு பூவும் பூமியிலே ஒப்பானது இல்லை'என்று
கூறி, இதழ் ஆயிரத்தின் மிக்க அ மலரை கை மலரில் கொடுத்து -
ஆயிரமிதழ்களோடு கூடிச் சிறந்த அந்தப்பூவை (வீமசேனனது)
செந்தாமரைமலர்போலுங் கையிலே கொடுத்து, ஈது ஒக்கும் அணி மலர் நீ
எனக்கு அருளவேண்டும் என்ன - 'இம்மலரையொத்தஅழகிய மலரை நீ
எனக்குக் கருணைசெய்துகொடுக்கவேண்டும்'என்று (திரௌபதி)
பிரார்த்திக்க,-செம்மலையின்திகழ் சிகரம் திண் தோள் - அழகியதொரு
மலையிலேவிளங்குகிற கொடுமுடிபோன்று வலிய தோள்களையுடைய,
வீமன்-வீமசேனன், தெய்வம் முனிபுங்கவன்தன் திரு தாள்போற்றி-
தெய்வத்தன்மையையுடைய அந்த உரோமசனென்ற இருடிச்சிரேஷ்டனது
திருவடிகளைவணங்கி, மெய் மலரை திரு முன்பு வைத்து நின்று -
உண்மையான அந்தமலரை (அம்முனிவனது) சந்நிதனத்திலே வைத்துவிட்டு
நின்றுகொண்டு, வினவினான்- ('இதன்வரலாறு யாது?'என) அவனைக்
கேட்டான்;அவன்உம் எதிர்