பக்கம் எண் :

234பாரதம்ஆரணிய பருவம்

விளம்புவான் -அம்முனிவனும் (அவ்வினாவுக்கு)விடை கூறுபவனானான்;   
(எ-று.)-அதனைமேலே காண்க.

     உலகமெங்கும்அகப்படாத இந்த மலரின் சிறப்பை நோக்குமிடத்து
'இதுமாயையினாலாகியமலரோ?'என்று ஐயங்கொள்ள இடமுண்டாதலின்,
அதனையொழித்தற்கு'மெய்ம்மலர்'என்றான்: மலரென்றால்இதுவே மலர்,
மற்றையவை மலரல்லவென்னும் பொருளும் இத்தொடரில் தோன்றும்.
அம்மலர் என எடுத்து, அழகிய பூவென்றுங் கொள்ளலுமாம்.
செம்மலையென்பதை-செம்பொன் மலையெனக்கொள்வாருமுளர்.  அவனி
- அவநி: மன்னவராற் பாதுகாக்கப்படுவதென்று காரணப்பொருள்படும்
வடசொல்.  புங்கவன் என்பதற்கு - ஆண்பசு [எருது]போன்றவனென்று
பொருள்: சிங்கம், புலி, யானை,காளைஇச்சொற்கள் மனிதனுக்கு
வரும்போது சிறப்புப்பொருளையுணர்த்துதல், மரபு.            (350)

14.-உரோமசன்அம்மலரைப்பற்றிக் கூறுதல்.

என்பலவுமியாமுரைப்பதிந்தப்பூவினியல்பினையும்
                     பெருமையையுமியக்கர்தங்கண்,
மன்பதியிலுளதன்றிவரம்பிலாத வானுலகிலுள
                        தென்னின்மற்றுமுண்டோ,
உன்பிறருக்கிதுகோடற்கெளிதோமாயனும்பர்பதிபுகுந்தொரு
                             பைந்தோகைக்கீந்த,
பின்பிதனைக்கண்டறிவாரில்லையென்றுபேசினான்
                       யாவரொடும்பேச்சிலாதான்.

     (இ-ள்.) யாம்-,இந்த பூவின்-,இயல்பினையும்-,பெருமையையும்-,
பலஉம் - பலபடியாக, என்உரைப்பது-?(இப்பூ),-இயக்கர்தங்கள்
மன்பதியில் - யட்சர்கட்குத் தலைவனானகுபேரனுடைய நகரான
அளகையிலே, உளது-;அன்றி - அல்லாமல், வரம்பு இலாத - (சிறந்த
பொருள்களில் இன்னதுதான் உள்ளது என்று) வரையறுத்துச்
சொல்லமுடியாத, வான் உலகில் - தேவலோகத்தில், உளது -
கிடைப்பதாகும்;என்னின் - இவ்வாறானால்,மற்றுஉம் உண்டுஓ - மேலும்
சொல்லவேண்டுவது உண்டோ?  உன் பிறருக்கு - உன்னைக்காட்டிலும்
வேறுபட்டவர்க்கு,  இது-இம்மலர், கோடற்கு-கொண்டு வருதற்கு, எளிதுஓ-
எளிதாகுமோ?  மாயன்-ஸ்ரீக்ருஷ்ணபகவான், உம்பர்பதிபுகுந்து-
தேவலோகத்திலே புகுந்து, ஒரு பைந் தோகைக்கு - ஒப்பற்ற இளைய
மயில்போன்ற சாயலையுடையளானசத்தியபாமைக்கு, ஈந்த-
(பாரிசாதமரத்தையே) தந்த, பின்பு-,இதனை- இதுபோன்ற சிறந்த
புஷ்பத்தை, கண்டு அறிவார் இல்லை-,என்று-,பேசினான்- கூறினான்:
(யாவனென்னின்),-யாவரொடுஉம் பேச்சு இலாதான் - எவரோடும்
பேசுதலில்லாத உரோமசமுனிவன்;(எ-று.)

     இதனால்,இந்தப்பூ அளகையிலுள்ள தென்றும், உன்னாற்கொள்ள
முடியுமென்றும், இது வானுலகத்திலுள்ள தெய்வப்பூவோடொப்பது என்றும்
கூறியவாறாயிற்று: முதலில் இயக்கர் தங்கள் பதியிலுள்ளது என்றுகூறி,
பிறகு 'வானுலகிலுள்ள'என்று கூறினான். இதனால்,'கிடைப்பதற்குஅரிய
இந்தப்பூப்போன்ற