சிறந்த மலர்வானுலகிலுள்ளது'என்று கருத்துக்கொள்ள வேண்டுமேயின்றி இதுவே வானுலகத்திலுள்ளது என்று கொள்ளுதல் இயலாது. இங்ஙன்சிறந்த வானுலகத்து மலரை ஸ்ரீக்ருஷ்ணபகவான் சத்தியபாமைக்குத் தந்ததை மூன்றாமடிகூறிற்று: மாயவன் மலரைப் பைந்தோகைக்கீந்த சரிதை வருமாறு:-கண்ணன்நரகாசுரனையழித்தபின்பு அவனால்முன்பு கவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதிதேவியின்) குண்டலங்களைஅவ்வதிதிதேவிக்குக் கொடுக்கும்பொருட்டுச் சத்தியபாமையுடனே கருடன் தோள்மேலேறித் தேவலோகத்துக்குச் செல்ல, அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களையும்செய்தும் தேவர்க்கேயுரியதென்று தான் சூடியிருந்த பாரிசாதப்பூவைப் போன்ற பூவைக் கொடாமலிருக்க, சத்தியபாமை அந்தப்பூவில் விருப்புற்றவளாய், 'இவ்வகைமலரைத் தரும் இந்தப் பாரிசாதத்தருவைத் துவாரகைக்குக் கொண்டு போகவேண்டும்'என்ன, ஸ்ரீகிருஷ்ணன் அந்தத்தருவை வேரொடு பெயர்த்துக் கருடன் தோள்மேல் வைத்தருள, அப்போது இந்திராணி தூண்டிவிட்டதனால்வந்து மறித்துப் போர் செய்த இந்திரனைச்சகலதேவ சைனியங்களுடன் சங்கநாதத்தாலே பங்கப்படுத்திப் பின்பு பாரிஜாத மரத்தைத் துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமை வீட்டுப் புறங்கடைத் தோட்டத்தில் நாட்டியருளின னென்பது. (351) 15.-உரோமசமுனிவனால்அளகையிலுள்ளதாக வறிந்து வீமன் அம்மலரைக்கொணருமாறு செல்லுதல். இயக்கர்பதிதனிலுளதென்றிசைத்தமாற்ற மின்புறக்கேட்டொரு காலுமீறிலாத, வயக்கொடுவஞ்சராசனமும்வன்போர்வாகை மறத் தண்டுங்கரத்தேந்திமடந்தைநெஞ்சில், துயக்கமறவிக்கணத்திற் றெய்வபோகசுரபிமலரளித் திடுவனென்றுசொல்லிச், சயக்கரடமுறு தறுகட்சயிலமன்னசதாகதிமைந்தனுமிமைப் பிற்றினிச்சென்றானே. |
(இ-ள்.) சயம்- வெற்றியையும், கரடம் - மதத்தையும், உறுதறுகண் - மிக்க அஞ்சாமையையுமுடைய, சயிலம் - மலைபோன்றயானையை,அன்ன- ஒத்த, சதாகதி மைந்தன்உம் - வாயுகுமாரனானவீமனும்,-இயக்கர்பதிதனில் உளது என்று இசைத்த மாற்றம் - யக்ஷர்களுடைய ஊராகிய அளகாபுரி பட்டணத்தில் (இம்மலர்) இருக்கிறதென்று (உரோமச முனிவன்) சொன்னவார்த்தையை, இன்பு உற கேட்டு-மகிழ்ச்சிமிகக் கேட்டு, ஒரு கால்உம் ஈறுஇலாத-ஒருபொழுதும் அழிதலில்லாத, வய கொடு வெம்சராசனம்உம்-வலிமையையும் மிக்க கொடுமையையுமுடைய வில்லையும், வல் போர் வாகை - வலிய போரில் வெற்றிமாலைசூடுதற்குரிய, மறம் தண்டுஉம் - வலிமையையுடைய கதாயுதத்தையும், கரத்து ஏந்தி - கைகளிலே எடுத்துக்கொண்டு, மடந்தை நெஞ்சில் துயக்கம் அற-மனைவியான திரௌபதியினது மனத்திலேயுள்ள தளர்ச்சியொழியும்படி, தெய்வம் போகம் சுரபி மலர் இ கணத்தில் அளித்திடுவன் என்று |