பக்கம் எண் :

236பாரதம்ஆரணிய பருவம்

சொல்லி - 'தேவர்கள்அநுபவிப்பதற்குரிய நறுமணத்தையுடைய இதுபோன்ற
பூவை இந்தக் கணப்பொழுதிலேயே (சென்று) கொணர்ந்து கொடுப்பேன்'
என்று சொல்லி, இமைப்பின்-ஒருமாத்திரைப் பொழுதிலே, தனி - தனியாக,
சென்றான்- புறப்பட்டுப் போனான்;(எ-று.)

     முனிவனதுவார்த்தையைக்கேட்டதும் வீமன் எளிதில்
அளகாபுரிக்குப்போய் அவ்வகை மலரைக் கொண்டுவந்து கொடுக்கலாமென்று
கருதி மகிழ்ந்ததனால்,'இன்புறக்கேட்டு'என்றார். வீமன் கதைக்குச்
சத்துருகாதினி என்றுபெயர்;பகைவரைக் கொல்வது என்று பொருளாம்.
சராசனம்=ஸராஸநம்: அம்புகளைத்தள்ளுவதென்று அவயவப் பொருள்படும்.
தைவபோகஸு ரபி என்ற வடசொற்றொடர்திரிந்துவந்தது. சயம் என்பதை
ஜயமென்பதன் திரிபாகக் கொள்ளாமல், ஸயமென்ற வடசொல்லின் திரிபு
எனக் கொண்டால், (துதிக்)கை என்று பொருளாம். வலிமையும் பருமையும்
கம்பீரமான தோற்றமும் மதநீரருவி பெருகுதலும் அழித்தற்கருமையும்பற்றி,
யானைக்குமலையுவமை. யானையை 'சயக்கரடமுறுதறுகட்சயிலம்'என்றது -
வெளிப்படை;பிறகுறிப்பின் பாற்படும்.  ஸதாகதி-எப்பொழுதுஞ்
சஞ்சரித்தலுடையவன்.  இங்கே வீமனை 'சதாகதிமைந்தன்'என்று பெயராற்
கூறினது - பிதுஸ்ஸதகுணம் புத்ர:' என்றவாறு தந்தையாகிய வாயுவினும் பல
மடங்கு அதிகமாக விரைந்து நடந்துசெல்லும் வல்லமையுள்ளான்
மைந்தனானவீமனென்பதற்கு: கருத்துடையடைகொளி
தனிச்சென்றான்என்றதனால், இவன் அசகாய சூரனென்பது விளங்கும்.   (352)

16.-வீமன்விரைந்து சென்றதன் வருணனை

கைக்காற்றுந்தொடைக்காற்றுமூச்சுக்காற்றுங் கனகமணிவரை
                          போலக்கவின்கொள்சோதி,
மெய்க்காற்றும்பரந்தெழுந்துவனத்தி லுள்ள வெற்புநெடுந்
                         தருவனைத்துமொடிந்துவீழ,
எக்காற்றுமுடன் றெழுந்தவுகாந்தகால மெனச்சென்றானினவளை
                                களெண்ணில்கோடி,
செய்க்காற்றுஞ்செழுந்தரளநிலவுவீசச்சேதாம்பல்பகன்
                             மலருஞ்செல் வநாடன்.

     (இ-ள்)செய்க்கு - கழனிகளிலே, எண் இல் கோடி - அளவில்லாத
[அநேக]கோடிக் கணக்காகிய, இனம் வளைகள்- கூட்டமாகிய சங்குகளும்,
ஆற்றும் செழு தரளம்-(அவைகளாற்) பெறப்பட்ட மிகுந்த பெரிய
முத்துக்களும், நிலவு வீச - சந்திர காந்தி போன்ற குளிர்ந்த
வெள்ளொளியை வீசுதலால், சேது ஆம்பல் பகல் மலரும் - (அதனைச்
சந்திரனொளியென்றேகருதி மயங்கிச்) செவ்வாம்பற் பூக்கள் (உண்மையான
சந்திரனொளியில்லாத)பகற்பொழுதிலேயே மலர்தற்கிடமான, செல்வம் நாடன்
- (நிலவளம் நீர் வளம் முதலிய பல வளங்களையுமுடைமையால்)மிக்க
செல்வத்துக்குக் காரணமான குருநாட்டையுடைய வீமசேனன்,-கைகாற்றுஉம்
- கைகள் வீசுதலினாலுண்டாகிறகாற்றும், தொடை காற்றுஉம் - தொடைகள்
வீசுதலினாலுண்டாகிறகாற்றும், மூச்சு