பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்237

காற்று உம்-பெருமூச்சுவிடுகிறதினாலுண்டாகிறகாற்றும், கனகம் மணி வரை
போல் கவின் கொள் சோதி மெய் காற்றுஉம் - பொன்மயமான அழகிய
மகாமேரு மலைபோலஅழகு பொருந்திய ஒளியையுடைய உடம்பு
அசைவதனாலுண்டாகியகாற்றும், (ஆகிய இவையெல்லாம்), பரந்து எழுந்து-
பரவியெழுவதனால்,வனத்தில் உள்ள வெற்பு நெடுந் தரு அனைத்துஉம்
ஒடிந்து வீழ - (அவன் செல்லும் வழியில்) காடுகளிலுள்ள மலைகளும்
உயர்ந்த மரங்களும் ஆகிய எல்லாம் முறிந்து விழும்படியாகவும்,-எ
காற்றுஉம் உடன்று எழுந்து உகாந்த காலம் என - (அதனைக்கண்டு
எல்லோரும்) எல்லாக்காற்றுக்களும் மோதியெழப்பெறுகிற பிரளயகாலம் இது
என்று சொல்லும்படியாகவும், சென்றான்-(வடதிசையிற்)போனான்;

     முதலிரண்டடிகளால்,வீமசேனனது அளவில்லாத வலிமை
விளங்குகின்றது, 'கனகமணிவரைபோல'என்ற உபமானத்தால் வீமனது நிறம்
பொன்னிறமென்பது அறிக. காற்றும் என்றதை-பலதிசைக் காற்றுக்களாகக்
கொள்க.  சருவசங்கார காலத்தில் ஒருசேரப் பலகாலம் பெருங்காற்று
அடிக்க, அதனால்அநேக உயிர்கள் அழியுமென்பது, புராணங்களின்
கொள்கை.  செய் - கழனியென்னும் பொருளதாதலை'நன்செய்','புன்செய்'
என வழக்கிலும் காண்க.  மிகுந்த நீர்வளமுள்ள இடங்களில்
தங்கும்படியான சங்குகளும் ஆம்பல்களும் கழனிகளிலேயுள்ளனவாகக்
கூறினது, அந்நீர்வளத்தை உணர்த்துதற்கென்க.  சங்கு, முத்துப்
பிறக்குமிடங்களில் ஒன்று.  சந்திரனைக்கண்டமாத்திரத்தில்
மலருந்தன்மையுடைய ஆம்பல்மலர்கள் வெள்ளியசங்குகளையும்
முத்துக்களையும்பார்த்துச் சந்திரனொளியெனமயங்கினவாகக்கூறினது,
மயக்கவணி.  வனவசாஞ் செய்யும் வீமனை'செல்வநாடன்'என்றது, இனித்
துதியோதனர் நூற்றுவரையுங் கொல்லும் இவன் அவர்களது நாடு
முழுவதுக்கும் உரியவனென்னுங் கருத்தால்.                     (353)

17.-வீமன்விரைந்துசென்று காஞ்சனவனத்தையுங் கடந்
திடுதல்.

இலங்கைநகர்தன்னில்விறலிராமதூத னிகலரக்கன்சோலையெலா
                                 மிறுத்தவாபோல்,
நிலங்குலுங்கவரைகுலுங்கவனத்தினுள்ள நெடுந் தருக்கள்
                        யாவையும்வேருடனேராக்கி,
விலங்கினொடுபுள்ளினமுமுடையத்தாக்கிமெய்ந்நடுங்கித்
                            தடுமாறிவெம்பியுள்ளம்,
கலங்கிவிழக்கனமதிர்வபோலவார்த்துக் காஞ்சனப்
                   பேரெழில்வனமுங்கடந்திட்டானே.

     (இ-ள்.)இலங்கை நகர் தன்னில் - இலங்காபுரியிலே, விறல்
இராமதூதன் - வெற்றிபொருந்திய ராமதூதனாகியஅநுமான், இகல்
அரக்கன் சோலைஎலாம்-மாறுபாட்டையுடைய அரக்கனான
இராவணனுடைய (அசோகவனிகையென்ற) சோலைமுழுவதையும், இறுத்த
ஆ போல் - முறித்த விதம்போல,-நிலம்குலுங்க-பூமி அசையவும்,
வரைகுலுங்க-மலைசலிக்கவும்,வனத்தின்உள்ள நெடுந்தருக்கள் யாவைஉம்-
காட்டிலுள்ள பெரிய மரங்கள் எல்லாவற்றை