போல் அனுமானது வலியபெரியதோள்கள் போர்க்கடலைக் கலக்கியதென்பார் 'மந்தராசலமனையதோள்'என்றார். மாருதி - மாருதனது மகனென்று பொருள்;மாருதன் - வாயுதேவன். கேசரி யென்னும் வானரவீரனது மனைவியானஅஞ்சநாதேவியினிடத்து வாயுதேவனுக்குப் பிறந்தவன் அநுமானென்க: இப்பெயர் - பீமசேனனுக்கும் வழங்கும். வீமனது தோள்வலிமை அநுமானது வடிவத்தைக்கண்ட மாத்திரத்தில் இனி அடங்குதலால், அதற்கு, அகத்தியரது வடிவத்தைக் கண்டமாத்திரத்தில் அடங்கிய விந்திய மலையைஉவமை கூறினாரென்க;இல்லாவிட்டால், புயாசலம் என வலிமைக்கு உவமை கூறுதலோடு 'விந்தமன்ன'என்ற உவமையுங் கூறியதற்குப் பயனின்றாம். இனி, விந்தாசலம் அன்ன திண்புயம் வீமன் என மொழி மாற்றினுமாம். இதுமுதல்இருபத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் முதற் சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள். (358) 22. | வெற்பிரண்டினில்வேலைமுன்கடந்ததாணீட்டிப் பொற்புயாசலமிரண்டையு மிருவரைபோக்கி அற்பவாழ்வுடையரக்கன்மா நகரழலூட்டும் சிற்பவாலதிதிசையெலாஞ் சென்றுநின்றோங்க. |
(இ-ள்.)வெற்பு இரண்டினில் - இரண்டுமலைகளிலே,முன்-(இராம தூதனாகஇலங்கையிற்சென்ற) முற்காலத்தில், வேலைகடந்த - கடலைக் கடந்த, தாள் - பாதங்களை,நீட்டி-,பொன் புயாசலம் இரண்டைஉம் - பொன்போலழகிய மலைபோன்றகைகளிரண்டையும், இரு வரை போக்கி - இரண்டுமலைகளிலேசெலுத்தி, அற்பம் வாழ்வுஉடை - அற்பமான வாழ்க்கையையுடைய, அரக்கன் - இராவணனுடைய, மா நகர் - பெரிய நகரை, அழல் ஊட்டும்-அழலையுண்ணுமாறு[எரிக்குமாறு]செய்த, சிற்பம் - தொழில்செய்வதில் திறமையுள்ள, வாலதி - (தன்) வால், திசைஎலாம் - திக்குகளிலெல்லாம், சென்று - போய், நின்று இருந்து, ஓங்க-ஓங்கா நிற்க,- (எ-று.)-'இருந்தனன்'என மேற்கவியில் முடியும். இதனால்,அப்போது பேருருவுகொண்டிருந்தனன் அநுமான் என்பது, பெறப்படும். இவன் இராமதூதனாய்இலங்கைபுக்கு அந்நகரையெரியூட்டியமை பிரசித்தம். சிற்பம்-சிறுமை என்றாருமுளர். (359) 23. | எம்பிரான்றனக்கொழியவே றியாவர்க்குந்தெரியாச் செம்பொன்மாமணிக்குண்டல மிருபுறந்திகழ விம்பமால்வரைமீதொரு மேருவேயொக்கும் அம்பொன்மால்வரையிருந்தென விருந்தனனனுமான். |
(இ-ள்.)எம்பிரான் தனக்கு ஒழிய-நமக்கெல்லாந் தலைவரான திருமாலொருவருக்கே யல்லாமல், வேறு யாவர்க்குஉம் தெரியா - வேறு ஒருவர்க்கும் கட்புலப்படாத [தெய்வத்தன்மையுடைய],செம்பொன் மா மணி குண்டலம்-சிவந்த பொன்னாலாகியசிறந்த இரத்தி |