என்று கருத்துக்கொள்ளுதலும் ஏற்கும். வல்லை-வன்மையென்னும் பண்பினடியாப் பிறந்த முன்னிலைக்குறிப்புமுற்று. நீயறியாய் என்று பிரதிபேதம். (364) 28.-அநுமான்வாலையன்றிச்சாதாரணமான குரங்கின் வாலைக்கடத்தல் எனக்கு அரிதேயோ? என்று வீமன் கூறுதல். உரங்கொள்வீமனம்மாருதி யுரைத்தசொற்கேளா வரங்கொள்வார்சிலையிராகவன்மாப்பெருந்தூதன் தரங்கவாரிதிதாவுமென் றம்முன்வாலன்றிக் குரங்கின்வாலிதுகடப்ப திங்கரியதோகூறாய். |
இரண்டு கவிகள் - ஒருதொடர். (இ-ள்) உரம்கொள் வீமன் - வலிமையைக் கொண்டுள்ள வீமசேனன்,-அமாருதி உரைத்த சொல் கேளா - அந்த அநுமான் சொன்ன வார்த்தையைக் கேட்டு, வரம் கொள் வார் சிலைஇராகவன் மா பெரு தூதன் - (அகத்திய முனிவனிடத்தினின்று) வரமாகப் பெற்ற கட்டமைந்த நீண்ட (கோதண்டமென்னும்) வில்லையுடையஸ்ரீராமனது சிறந்த பெரிய தூதனாகிய,தரங்கம் வாரிதி தாவும் என் தம்முன் - அலைகளையுடைய கடலைக்கடந்திட்ட எனது தமையனானஅனுமானினது, வால் அன்றி - வால் மாத்திரம் கடப்பதற்கு அரியதேயல்லாமல், குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரிய ஓ-சாதாரணக் குரங்காகிய உனது இந்த வாலைக் கடப்பது எனக்கு இப்போது அருமையானதோ? கூறாய்-சொல்லு;(எ-று.)- 'என்றுதன்றிருத்துணைவனின்றிசைத்ததுகேட்டு'என்று மேலே தொடரும். உரம் - தேகபலமும், ஆயுதபலமும். விசுவகருமனால் நிருமிக்கப்பட்டுச் சிவபிரானைச்சயித்துப் பின்பு திருமாலின் கையிலிருந்தது பரசுராமன் பக்கல் வந்து பல அரசர்களையும்வென்று பின்னர் இராமபிரானிடம் அவராற் கொடுக்கப்பட்டதொரு வில் உண்டு: அதனை அவரிடத்திலிருந்து பெற்றுச் சென்ற வருணன் பின்பு கரன் முதலிய இராட்சதர்களின் வதத்தின் பொருட்டு அகத்திய மகாமுனிவர்மூலமாக அவ்விராகவமூர்த்திக்கே கொணர்ந்து கொடுத்தன னென்ற வரலாறுபற்றி, 'வரங்கொள்வார்சிலையிராமன்'என்றது. தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரனானஸ்ரீராமன் தந்தையின் சொல்லைக்காக்கவேணுமென்று கானகஞ் சேர்ந்து பஞ்சவடியில் வசிக்கும்போது தன்னைமணந்துகொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்தித்த சூர்ப்பணகையின் செவிமுதலிய உறுப்புக்களையறுப்பித்தான்: பின்னர் அவளுக்காகப் பரிந்து வந்த கரன் முதலிய கொடிய இராக்கதர் பலரையும் கொன்றொழித்தானாக, பின்பு சூர்ப்பணகையினால்தூண்டப்பட்டு இராவணன் பெருங்காதல் கொண்டு சீதையைக் கவர்ந்து சென்றான். கவர்ந்து சென்ற சீதையைத் தேடும்பொருட்டு வாநர ராசனானசுக்கிரீவன் வாரை வீரர் |