பக்கம் எண் :

246பாரதம்ஆரணிய பருவம்

களைஆங்காங்குத் தூதனுப்புகையில் தென்திசையில் இரண்டு வெள்ளம்
வானரசேனையுடன்அனுப்பப்பட்ட அங்கதன் ஜாம்பவான் நீலன் அநுமான்
முதலியோரில் அனுமான் கடல்கடந்து இலங்கையை யடைந்து சீதையைத்
தேடிக் கண்டு செய்தி சொல்லி அடையாள மோதிரத்தைக் கொடுத்துத்தேற்றி
அவளிடம் செய்தியும் சூளாமணியும் பெற்றுக்கொண்டு மீண்டு வந்து
இராமனிடம் அச்செய்தியைச் சொல்லினான்:அதுபற்றி,
'இராகவன்மாப்பெருந்தூதன்தரங்கவாரிதி தாவும் என்தம்முன்'
எனப்பட்டான்.  வாரிதி-வடசொல்;நீர் தங்குமிடமென்று பொருள். (365)

29.-வீமன்கூறியது கேட்ட அநுமான் மனிதனைச்சுமந்த
அக்குரங்கை என்னோடுஒப்பச்சொல்லலாமோ?  எனல்.

என்றுதன்றிருத்துணைவனின்றிசைத்ததுகேட்டு
நன்றுநன்றுநீநவின்றது நன்றெனநகையாத்
துன்றுவார்சிலைமனிதனைச்சுமந்துதோள்வருந்தும்
புன்றொழிற்சிறுகுரங்கையோவென்னொடும்புகல்வாய்.

     (இ-ள்.) என்று-,தன் திரு துணைவன்- தனது சிறந்த
உடன்பிறந்தோனானவீமசேனன், நின்று - எதிர்நின்று, இசைத்தது-
சொன்னதை, கேட்டு-,'நன்றுநன்றுநீ நவின்றது நன்று'என நகையா-
நன்றாயுள்ளதுநீ கூறுவது நன்றாயுள்ளதுஎன்று ஏளனமாகச் சிரித்து,-துன்று
வார் சிலைமனிதனை-(நாணி)நெருங்கிய நீண்ட வில்லையேந்திய
மனிதனானராமனை,சுமந்து - தாங்கி, (அதனால்),தோள் வருந்தும்-
தோள்வருத்தமடைந்த, புல்தொழில் சிறு குரங்கைஓ -
அற்பத்தொழிலையுடையசிறியகுரங்கையா,என்னொடுஉம்புகல்வாய் -
என்னிடத்துப் பாராட்டிச் சொல்வாய்?  (எ-று.)-என்றுதான்
வேறொருவானரன்போலத்தோன்றும்படி வீமனிடம் கூறினானனென்க.நன்று
நன்றிதுநவின்றதுவென மிகைநகையா என்று பிரதிபேதம்.           (366)

30.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: வீமன் மிகச்சிரித்து
இராகவ அநுமார்களின்பெருமைகளைச்சொல்ல,அநுமான்
மீண்டும் வினாதல்.

குரக்குநாயகனவ்வுரை கூறலுங்கேட்டுத்
தரைக்குநாயகன்றடம்புயங் குலுங்கிடநகையா
அரக்கர்நாயகனூரழ லூட்டியிவ்வகிலம்
புரக்குநாயகன்றன்னையோவிழித்துநீபுகல்வாய்.

     (இ-ள்) குரங்குநாயகன் - வானரசிரேட்டனானஅனுமான், அ உரை
- (புன்றொழிற்குரங்கையோஎன்னொடும்புகல்வாய்என்ற) அந்த
வார்த்தையை, கூறலும் - சொன்னவுடனே,-கேட்டு-தரைக்கு நாயகன் -
பூமிக்குத் தலைவனானவீமசேனன், தட புயம்-, (தனது) பெரிய தோள்கள்,
குலுங்கிட - குலுங்கும்படி, நகையா - பெருஞ்சிரிப்புச் சிரித்து,-அரக்கர்
நாயகன் ஊர் - ராட்சதர் தலைவ