னானஇராவணனுடையஊரை, அழல் ஊட்டி - நெருப்புக்கு இரையாக்கி,- இ அகிலம் புரக்கும் நாயகன் தன்னைஓ-இந்தஉலகத்தையெல்லாம் இடர்தீர்த்துப் பாதுகாப்பவனானஅனைவர்க்குந்தலைவனானஸ்ரீராமனையா, இழித்து-(ஒருமனிதனென்று) தாழ்மையாக, நீ புகல்வாய்-நீ சொல்லுவாய்? (எ-று.) ரட்சணகர்த்தாவாகிய திருமாலே ஸ்ரீராமனாகத்திருவவதரித்து வந்திருக்கையில் அப்பிரானைச்சாதாரணமனிதன்போற் பேசுவது இழுக்கு என்பான் 'அகிலம்புரக்குநாயகன்றன்னையோவிழித்து நீ புகல்வாய்' என்றான். (367) 31. | பின்னும்வார்சிலையிராகவன்பெருமையுமனுமான் மன்னுதோளிணைவலிமையுமாருதிசாற்ற அன்னபோழ்தினிலகமகிழ்ந் தருளுடனோக்கி என்னகாரியம்வந்ததிங் கியார்கொனீயென்றான். |
(இ-ள்.)(என்றுகூறி),-பின்உம்- மேலும், வார் சிலைஇராகவன் பெருமைஉம் - நீண்ட வில்லையேந்தியஸ்ரீராமனுடைய பெருமையையும், (அந்த ஸ்ரீராமனைத்தாங்கிய), அனுமான் - அனுமானுடைய, மன்னு - நிலைபெற்ற,தோள் இணைவலிமைஉம்-இரண்டு தோள்களின் வலிமையையும், மாருதி-வாயுகுமாரனானவீமசேனன், சாற்ற - சொல்ல,- அன்னபோழ்தினில்-அப்போது, (அனுமான்), அகம் மகிழ்ந்து-மனஞ் சந்தோஷித்து, அருளுடன் நோக்கி-(அந்த வீமசேனனைக்)கருணைகொண்டு கடாட்சித்து, 'இங்குவந்ததுஎன்ன காரியம்-இங்கு வந்தது என்ன காரியத்தைக் கருதியோ? நீ யார் கொல்-நீ யாவனோ?'என்றான்-என்று மீண்டும் வினவினான். (368) 32.-வீமசேனன்தன்னைஇன்னானென்றுதெரிவித்தல். தாமமாருதியுரைத்தசொற் றம்பியுங்கேட்டு நேமிமாநிலம்புரக்கும்நன் னீதிவேற்றரும நாமநாயகற்கிளையவனரனுக்குமூத்தோன் வீமன்வாயுவின்புதல்வன்யா னென்றன்விறலோன். |
(இ-ள்.)தாமம் மாருதி - ஒளியுடன்கூடிய அநுமான், உரைத்த - சொன்ன, சொல் - சொல்லை,தம்பிஉம் - அவர் தம்பியாகிய வீமசேனனும், கேட்டு-,'நேமிமா நிலம் புரக்கும்-வட்டவடிவாகவுள்ள பெரிய இந்நிலவுலகத்தைப் பாதுகாக்கின்ற, நல் நீதி - சிறந்த நீதியையுடையனான, வேல்-வேற்படையையுடைய, தருமன் நாமம் நாயகற்கு - தருமனென்று பேருள்ள தலைவனுக்கு,இளையவன்- அடுத்த தம்பியாவேன்: நரனுக்கு மூத்தோன் - அருச்சுனனுக்கு முன்பிறந்தவன்: வீமன் - வீமசேனனென்பது என் பெயர்: யான் வாயுவின் புதல்வன்-',என்றனன் - என்று (தன்னைஇன்னானெனத்)தெரிவித்தான்: (யாவனென்னில்),-விறலோன்- வலிமையை யுடையவனாகியவீமசேனன்;(எ-று.) |