அழுந்தத் தழுவி,-'எம்பி-என்தம்பியே!நீ-, செம் தழல் பம்பு கானிடை - செந்நிறமுள்ள தீப்பொருந்திய இக்காட்டிலே, பதம் மலர் சிவப்ப - தாமரை மலர்போன்ற (உனது) கால்கள் செந்நிறமடையும்படி, தனி நடந்த ஆறு - (வேறு துணையில்லாமல்)ஒன்றியாய் நடந்துவந்தது, என்கொல - என்னகாரணத்தாலோ?'என்று இசைத்தான் - என்று வினாவினான்;(எ-று.) கைகள்முழந்தாள்வரை நீண்டிருத்தல், உத்தம புருஷலக்ஷணம். வம்புசேர்மணிமால்வரைமார்புஎன்பதற்கு - (உலகத்தில் இதுவரை யில்லாமற்) புதுமையாய்ப் பொருந்தினதொரு ரத்தின மயமான பெரியமலைபோன்ற மார்பு என்று உரைத்தலுமாம். செந்தழல்-காட்டுத்தீ. எம்பி-அண்மைவிளி (375) 39.-கானகத்தையடைந்த காரணத்தை வீமசேனன் கூறுதல். தாயத்தாரும்வெவ்வஞ்சனைச்சகுனியுங்கூடி மாயத்தாலொருகவறுகொண் டெங்கண்மண்கொண்டு நேயத்தானெடுங்கானக நேர்ந்தனரென்றான் சீயத்தாலரசிழந்திடுஞ் சிம்புளேறனையான். |
(இ-ள்.)சீயத்தால்-சிங்கத்தினால்,அரசு இழந்திடும்- தலைமையொழியப்பெற்ற,சிம்புள்ஏறு அனையான்-ஆண்சரபத்தை யொத்தவனாகியவீமசேனன்,-நேயத்தால்-(அனுமானிடத்து) அன்புடன்,-'தாயத்தார்உம்-(துரியோதனன்முதலிய) பங்காளிகளும், வெவ்வஞ்சனைசகுனிஉம்-கொடிய வஞ்சகக்குணத்தையுடைய சகுனியும், கூடி-ஒன்றுசேர்ந்து, மாயத்தால் - மோசவழியால், ஒரு கவறு கொண்டு- ஒப்பற்ற சூதாட்டத்தை மேற்கொண்டு, எங்கள் மண் கொண்டு-எங்கள் இராச்சியத்தையும் பறித்துகொண்டு, நெடுங்கானகம்-நீண்ட காட்டினிடத்தை, நேர்ந்தனர் - (எங்கட்கு வசிக்குமாறு) தந்தார்கள்,'என்றான்-என்று கூறினான்; (எ-று.) 'கானிடைப்பதமலர்சிவப்பத் தனி நடந்தவாறு என்கொல்'என்ற வினாவை,'கானகத்தில்நடந்தவாறு என்கொல்,'என்றும் 'தனிநடந்தவாறு என்கொல்?'என்றும் இரண்டாகப் பிரித்துக் கொண்டு, முதல் வினாவிற்கு இச்செய்யுளால் விடையிறுத்து, அடுத்தவினாவுக்குஅடுத்த செய்யுளால் விடையிறுக்கப்படும். சரபம்-இரண்டு தலைகளையும்சிறகுகளையும்கூரிய நகமுள்ள எட்டுக் கால்களையும்மேல்நோக்கிய கண்களையுமுடையதொரு மிருகவிசேடம்:இதனைப்பறவை யென்றலும் உண்டு. இது, சிங்கத்தை எளிதிற் கொல்லுந் திறமுடையது. இவ்வாறு சிறப்புப் பொருந்திய சரபம் சிங்கத்தினால்தன்தலைமையொழியப்பெற்றாற்போலத்துரியோதனாதியரால் தலைமையொழியப்பெற்றோம்பாண்டவராகிய நாங்களென்று வீமன் கூறுகின்றானென்க. இவ்வுவமையால், தமக்கு இந்நிலைமைநேர்ந்தது விதிவசத்தாலென்று கூறியவாறு. சரபமாய் வந்த சிவபிரானை நரசிங்கமூர்த்தியான திருமால் அடக்கி |