னமையையுட்கொண்டுஇவ்வுவமை கூறினார்போலும், "வேள்குன்ற சரபத்தைப் பிளந்த சிங்கவேள்குன்றத்தினார்க்கு"என்றார்,பிள்ளைப் பெருமாளையங்கார். வில்லிபுத்தூரார் வைணவராயினும் பிறன்கோட்கூறலாகச் சிவபிரானைமேன்மையாகக் கூறுவர். (376) 40.-இதுவும் அடுத்தகவியும்-ஒரு தொடர்:தான் மலரின் பொருட்டுவந்ததைச்சொல்ல, அநுமான்கூறத் தொடங்குதல். திகந்தமெட்டினுந்தன்மண மொல்லெனச்செல்லச் சுகந்தபுட்பமொன்றியாமுறை வனத்தினிற்றோன்றத் தகைந்தவப்புதுமலர்தனைத்தழன்மகள்காணா வகைந்தவித்துணைமலரெனக்கருளுதியென்றாள். |
(இ - ள்.)திக் அந்தம் எட்டின்உம்-திக்குகளினெல்லைகளெட்டிலும், தன் மணம் ஒல்லென செல்ல - தன் பரிமளம் விரைவாகச் சென்று பரவும்படி, சுகந்தம் புட்பம் ஒன்று - நல்ல வாசனையுடையதொருமலர், யாம் உறை வனத்தினில் தோன்ற - நாங்கள் வசிக்கின்ற காட்டிலே வந்து காணப்பட, தகைந்த அ புதுமலர் தனை-(காண்பாரதுகண்ணையும் மனத்தையுந் தன்னிடத்தொழிய வேறிடத்திற் செல்லவொட்டாது) தடுத்திட்ட அந்தப்புதுமையான பூவை, தழல் மகள் காணா-அக்கினியினிடத்தே அவதரித்த குமாரியான திரௌபதி கண்டு, வகைந்த இ துணைமலர் எனக்கு அருளுதி என்றாள்-சிறப்புப்பொருந்தின இத்தன்மையான மலர்களை எனக்கு (த்தேடிக்கொண்டுவந்து) கொடுத்தருளுவா யென்று (என்னை நோக்கிக்) கூறினாள்;(எ-று.) தகைந்த-பெருமைபெற்ற என உரைத்தலுமாம்:விரிந்த என்று பொருளுரைப்பாருமுளர். நான்காமடியில், அகைந்த என்று பிரித்து, எழுந்த என்று உரைத்தாருமுளர். புதுமலர் - இதுவரை காணப்படாத மலர்: அதிசயிக்கத்தக்க மலர். (377) 41. | ஆதலாலிவண்யானுமின் றணுகினனென்று நீதியாலுயர்தம்முனைநெடுந்தகைபோற்றக் கோதிலாதவக் குரிசிலுங்குமரனைநோக்கித் தீதிலாயிதுகேட்கெனச் செப்புவன்மாதோ. |
(இ - ள்.)ஆதலால் - ஆகையினால்,இவண் - இவ்விடத்தில், இன்று-இப்பொழுது, யான்உம் அணுகினன் - நானும் வந்த சேர்ந்தேன், என்று-என்று சொல்லி, நீதியால் உயர்தம்முனை- நியாயத்தாற் சிறந்த தமையனானஅநுமானை,நெடுந்தகை-பெருமைக்குணமுடைய வீமன், போற்ற-துதிக்க,-கோது இலாத அ குரிசில்உம்-குற்றமில்லாத பெருமையிற் சிறந்த அவ்வனுமானும், குமரனைநோக்கி-இளையவனானவீமனைப்பார்த்து, தீது இலாய் இது கேட்க என - குற்றமில்லாதவனே! (யான் சொல்லும்) இவ்வார்த்தையைக் கேட்பாயாக என்றுகூறி, செப்புவன் - (சிலவார்த்தைகள்) கூறுபவனானான்;(எ-று.)-அதனைஅடுத்த கவிகளிற் காண்க. |