(இ-ள்.) என்று-,அடல் வீமன் - வலிமையையுடைய வீமசேனன், இசைத்திடும் முன்னம்-சொல்லுதற்கு முன்பு [சொன்னவுடனேஎன்றபடி],- நித்தம்உம்உள்ளான் - எப்போதும் உள்ளவனான[சிரஞ்சீவியாகிய] அநுமான்,-இஏழ் உலகங்கள்உம் ஒன்றி ஒன்றுஆம் - இந்த ஏழுலகங்களிலும் பொருந்தி ஒன்றாகவுள்ள,மன்று உள தார் புனை வாமனனைபோல் - வாசனையுள்ளமாலையையணிந்தவாமனனைப்போல, நின்று நிமிர்ந்தனன் - எழுந்து நின்று உயரலானான்;(எ-று.) மன்று -மன்றல்: மன்றம் எனவும் வரும். வாமனன் என்பது திருமாலின் ஐந்தாமவதாரம்: அவன் மகாபலிபக்கல் சென்று தன் காலடியில் மூவடிமண் கொடுக்குமாறு அவ்வரசனிடத்து வேண்டிப் பெற்றுத் திரிவிக்கிரமனாகிப்பேருருவெடுத்து மண்ணெல்லாம் ஓரடியாகவும், விண்ணெல்லாம் மற்றோரடியாகவும்அளந்து மற்றோரடிமண்கொடுப்பதாக அந்த மகாபலியைச் சிறைவைத்தானென்ப. பிரமசாரியான வாமனனுக்குத் தார் இல்லையாயினும், திருமாலாயிருக்கும் நிலையில்தார் உண்டு என்க. இதுமுதல்முப்பத்திரண்டு கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்றாஞ்சீர்கள்விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள். (387) 51.-அநுமானதுபெருந்தோற்றம். படியினதெல்லைபதத்தினதெல்லை மடியினதெல்லையவ்வானினதெல்லை அடியினதெல்லையளப்பரிதென்றான் முடியினதெல்லை மொழிந்திடலாமோ. |
(இ-ள்.)பதத்தினது - அடிவைப்பினுடைய, எல்லை- பரப்பளவு,- படியினது எல்லை- பூமியின் பரப்பின் அளவாகும்: மடியினது எல்லை-, அ வானினது எல்லை- அந்த வானினெல்லையளவாகும்: அடியினது - காலின், எல்லை-,அளப்பு அரிது - அளத்தற்கு முடியாது, என்றால்-, முடியினது - சிரசின், எல்லை-,மொழிந்திடல் ஆம்ஓ - சொல்லுதற்கு முடியுமோ? (எ-று.) பதம் என்றது -நிலத்தில் கால் ஊன்றுகின்ற பகுதி. அடி என்றது - உடம்பின் காலில் ஒருகூறாய்,அதனால்கால் என்று வழங்குதற்கு உரியதாய் முழங்காற்குக் கீழ்ப்பட்டுள்ள பாகம். அந்தக்கால் சாதாரணமாகக் கண்ணாற் காணுதற்கு எளியது: அப்பகுதியே கண்ணாற் காணமுடியாதென்பது திண்ணமாதலால், முடியினதெல்லையைப்பற்றிச்சொல்லமுடியுமோ? முடியாதென்கிறார்: தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி. (388) 52.-அநுமானுடம்பைச்சுற்றிய வாலின் தோற்றம். அந்தரமெங்கு மடக்கியமெய்யில் சுந்தரவாலதி சுற்றியதோற்றம் |
|