பக்கம் எண் :

258பாரதம்ஆரணிய பருவம்

முந்தியநீளுடல் வாசுகிமுன்னாள்
மந்தரவெற்பை வளைத்ததுமானும்.

     (இ-ள்.)அந்தரம் எங்குஉம் அடக்கிய மெய்யில்-ஆகாயத்தினிட
முழுவதையும் தன்னதாக்கிக்கொண்ட (அநுமானுடைய) உடம்பிலே, சுந்தரம்
வாலதி சுற்றிய தோற்றம் - அழகிய வால் சுற்றிக்கொண்டிருந்த காட்சி,-
முன்நாள்-(தேவாசுரர்கள் பாற்கடலைக்கடைந்த) முற்காலத்தில், மந்தரம்
வெற்பை - மந்தரமென்ற மலையை,முந்திய வாசுகி நீள் உடல் - விரைவு
பொருந்திய வாசுகியின் நீண்ட உடலானது, வளைத்தது-
சுற்றிக்கொண்டிருந்ததை, மானும் - ஒக்கும்;(எ-று.)

     அநுமானுக்குமந்தரமலையும்,அவனுடலைச்சுற்றியவாலுக்கு அந்த
மந்தரமலையைச்சுற்றிய வாசுகியினுடலும் உவமையெனக் காண்க.    (389)

53.-அநுமானுடலின்வருணனை.

நீளகல்வான நெருங்கமருங்கே
தோள்புறம்வாலதி சூழ்தரநிற்போன்
நாளொடுதாரகை ஞாயிறுமுதலாம்
கோளணிசூழ்வரு குன்றமுமொத்தான்.

     (இ-ள்.) நீள்அகல் வானம் - நீண்ட பரந்த வானம், மருங்கு நெருங்க
- பக்கத்தில்தானே நெருங்கவும், தோள் புறம் - தோளினிடத்தே, வாலதி
சூழ்தர-வால் (வட்டமாகச்) சூழவும், நிற்போன்-நிற்பவனாகியஅனுமான்,-
நாளொடு -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களுடனே, தாரகை -
(மற்றுமுள்ள) நட்சத்திரங்களும், ஞாயிறு முதல்ஆம் கோள் - சூரியன்
முதலிய நவக்கிரகங்களும், அணி - முறையாக, சூழ்வரு -
பிரதட்சிணஞ்செய்கின்ற, குன்றம்உம் - மேருமலையையும்,ஒத்தான் -
ஒத்திருந்தான்;(எ-று.)

     சிரசுவானத்திலே நெருங்க, தோளினிடத்து வாலதி சூழ்தர நிற்கும்
அனுமான், தன்சிகரம் வானத்து நெருங்கத் தோட்பகுதியிலே நாள் தாரகை
கோள் என்ற இவை சூழ்ந்து வரப்பெறும் மேருமலையைப்போன்றனன்
என்க.                                                 (390)

54.-வானவர்அனுமானுருவைக்கண்டு வியத்தல்.

இவ்வகைமுன்ன மிலங்கையெரித்தான்
பைவருநாகர் பணஞ்சுளியத்திண்
மெய்வகைகொண்டது கண்டுவியந்தார்
மைவகைசேரகல் வானவரெல்லாம்.

     (இ-ள்.)முன்னம் இலங்கை எரித்தான் - முன்பு இலங்காபுரியை
யெரித்தவனாகியஅனுமான்,-இ வகை - இவ்வாறு, பை வரு நாகர் பணம்
சுளிய - படம்பொருந்திய நாகலோகத்துள்ளவரான அஷ்டமகாநகர்களின்
படங்கள் (சுமை மிகுதியாற்)சுருங்க,