லையில்வடிவு கொள் பொழுதத்து - பழமையான (தன்) வடிவை அநுமான் கொண்டபோது,-(அந்தஅநுமானைநோக்கி வீமசேனன்), அந்தம் இலாய் - அழிவில்லாதவனே [சிரஞ்சீவியே!]அடியேன் பிழைஎல்லாம் - நான் உன்னைப்பற்றிஅலட்சியமாகக் கருதிச்செய்த பிழையையெல்லாம், புந்திஉறாது- மனத்திற்கொள்ளாமல், பொறுத்தருள் - பொறுத்தருள்வாய், என்றான்-; (எ-று.) அநுமானைச்சாதாரண குரங்கெனக் கருதி முந்துறப் பேசியது முதலியவற்றை மனத்திற்கொண்டு, வீமசேனன், இங்ஙனம் அபராதக்ஷாமணம் செய்துகொள்ளுகின்றனன். (395) 59.-அனுமான்பாதங்களில் வீமன் விழ, அவன் கூறலுறுதல். திருவடிதன்னிரு சேவடியிற்போய் மருவடிதார்புனைமாருதிதொழவே அருள்வடிவாகி யகண்டமுமெங்கும் ஒருவடிவானவ னுற்றுரைசெய்வான். |
(இ-ள்.)திருவடிதன் - அனுமானுடைய, இரு சே அடியில்-இரண்டான செவ்விய பாதங்களில், போய்- கிட்டி, மரு வடி தார் புனைமாருதி - வாசனையைவெளிப்படுத்துகின்ற மாலையையணிந்தவாயுகுமாரனான வீமசேனன், தொழ - தண்டனிட,-அருள்வடிவு ஆகி அகண்டம்உம் எங்குஉம் ஒரு வடிவு ஆனவன் - அருளே ஒரு வடிவு எடுத்தாற்போலப் பேரருளுடையவனாகிப்பூமி முழுவதும் எல்லாவிடத்தும் அமையுமாறு ஒப்பற்ற பேருருவெடுத்த அந்த அனுமான், உற்று - மனம்பொருந்தி, உரைசெய்வான் - (பின்வருமாறு) பேசுவானானான்;(எ-று.)-அனுமான் பேசுவதை மேற்செய்யுளிற் காண்க. திருவடி என்பது- அனுமானுக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும்பெயர்: இவர் இராமபிரானுக்கு வாகனமாகி அப்பிரானது திருவடிகளையேந்தினவராதலால், இப்பெயர் பெறுவர், மாருதி விழவே என்றும் அருவடிவாகி என்றும் பிரதிபேதம். (396) 60.-அனுமான்அருளியது. உன்னருகேபயி லும்பியரோடும் மின்னருகேபயில் வேந்தொடும்வாழ்வுற்று என்னருகேவரு கென்றனனென்றும் தன்னருகேத முறாததவத்தோன். |
(இ-ள்.)என்றுஉம் - எப்போதும், தன் அருகு-தன் சமீபத்திலும், ஏதம் - குற்றமென்பது, உறாத- பொருந்தப்பெறாத,தவத்தோன் - தவத்தையுடையவனாகியஅநுமான்,-(வீமனைநோக்கி), 'உன்அருகு - உனது சமீபத்திலே, பயில் - பழகுகின்ற, உம்பிய |