இதனால்புண்டரீகவரக்கனுடைய உடம்பினிறம் சிரசு வஞ்சனைக் குணம் என்ற இவை கூறப்பட்டன;விஷத்தைக் கருநிறமுடையதென்ப. மேகமொடு, அஞ்சனம்-மையையும் எனவுமாம். கொடியோடி - நீளமாகப் போய் எனினுமாம். கால் - முதனிலைத்தொழிற்பெயர். (406) 70. | குளிர்வரையொன்றிய நீள்குகரம்போல் அளவில்பெரும்பகு வாயதின்மதியின் பிளவெனலாவளையும்பிறழுந்தண் இளநிலவென்ன விலங்குமெயிற்றான். |
(இ-ள்.)குளிர் வரை ஒன்றிய - குளிர்ந்த மலையிலேபொருந்திய, நீள் குகரம் போல்- நீண்ட குகைபோலே, அளவுஇல் பெரு - அளவில்லாது மிகப்பெரிய, பகுவாய்அதின் - பிளவுபட்ட வாயிலே, மதியின் பிளவு எனல் ஆ வளையும்-சந்திரனுடையபிளவு [பிறைச்சந்திரன்]என்று சொல்லுமாறு வளைந்துள்ள,பிறழும் - விளங்குகின்ற, தண் இள நிலவு என்ன இலங்கும் - குளிர்ந்த பிறை போல வெள்ளொளி வீசுகிற, எயிற்றான்- கோரப்பற்களை யுடையவனும்,-(எ-று.) வளையும்எயிறு, பிறழும் எயிறு, இளநிலவென்ன விலங்கும் எயிறு என்க. இள நிலவு-இலக்கணையால்,பிறைச்சந்திரனாயிற்று. 71. | ஆறிருகாத மகன்றுயர்தோளான் நூறிருகாத நொடிக்குணடப்பான் ஏறுடையான்முதல் யாவர்களெனினும் மாறொடுகாதிமலைந்திடவல்லான். |
(இ-ள்.) ஆறுஇரு காதம் அகன்று உயர் தோளான் - பன்னிரண்டு காததூரம் விலகி உயர்ந்துள்ள தோள்களையுடையவனும்,நொடிக்குள்நூறு இருகாதம் நடப்பான்-நொடிப் போதிற்குள் இருநூறு காததூரம் நடக்கும் வல்லமையுடையவனும், ஏறு உடையான் முதல் யாவர்கள் எனின்உம் மாறொடுகாதி மலைந்திடவல்லான் - ரிடபத்தை வாகனமாகவுடையவனான சிவபிரான் முதல் யாவர் எதிர்த்துவந்தாலும் (அவரோடு) மாறுபாடுகொண்டு மோதிப் போர்புரியும் வல்லமையையுடையவனுமாகிய,-(எ-று.) ஆறிருகாதம்,நூறிருகாதம்-பண்புத்தொகைகள். ஏறுடை யானைக் கூறியது - சங்காரமூர்த்தி யாதலால். அகன்றிடு என்றும் பாடம். (408) 72. | எண்டிசையுந்திறை கொண்டிகலோடும் புண்டரிகப்பெயர் நாடுபொறித்தோன் திண்டிறன்மாருதி சேய்வருவானைக் கண்டனனங்கழல் கான்றிடுகண்ணான். |
(இ-ள்.)இகலோடுஉம் - (தன்) பராக்கிரமத்தினால்,எண்திசைஉம்- எட்டுத் திக்கிலும், திறை கொண்டு-வரிப் பொருளைப் |