முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள்போல இறகுடை யனவாயிருந்து அவற்றால்உலகமெங்கும் பலவிடத்தும் பறந்து திரிந்து தமக்கு விருப்பமான இடங்களின்மே லுட்கார்ந்து அவ்விடங்களையும் அவற்றிலுள்ள பிராணிகளையும்பாழாக்கிவருகையில் அத்துன்பத்தைப் பொறுக்க மாட்டாத முனிவர் தேவர் முதலியோரது வேண்டுகோளால் தேவேந்திரன் தனது வச்சிராயுதத்தினால்அவற்றைச் சிறகறுத்துத் தள்ளிவருகையில் மைநாகமென்னும்மலைவாயுதேவனது உதவியால் ஓடிச்சென்று கடலினுள்ளே ஒளிந்த தென்பது கதை;இம்மலை அவ்வாயுகுமாரனானஅனுமான் இராமபிரானது நியமனத்தின்படி சீதாபிராட்டியைத் தேடும் பொருட்டு இலங்கைக்குச் செல்லுதற்குக் கடலைத் தாண்டும் பொழுது இடைவழியிலே அக்கடலினின்று அவருக்கு உதவிக் கைம்மாறுசெய்யக் கருதி முயன்ற தென்பதை, இராமாயணத்திற் காணலாம். முன்னொருகால்வாயுதேவனுக்கும் ஆதிசேக்ஷனுக்கும் தமக்குள் யார்பலசாலியென்று விவாத முண்டாக அதனைப்பரீக்ஷித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேருமலையின்சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவ தென்றும் ஆதிசேக்ஷன் அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வ தென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும் தத்தம் வலிமையைக் காட்டத் தொடங்கியபொழுது, ஆதிசேக்ஷன் தனது ஆயிரம்படங்களாலும் மேருமலையின்ஆயிரஞ் சிகரங்களையுங்கவிந்து பெயரவொட்டாமற் பலநேரங் காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால் அம்மலைச்சிகரங்கள்மூன்றைப்பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளிவிட்டா னென்றும், அவற்றுள் கடலினிடையே தள்ளப்பட்டதொரு சிகரத்தின்மீதே இலங்கைத்தீவு ஏற்பட்ட தென்றும், அச்சிகரமே திரிகூடமென்றும் திரிகோணமென்றும் பெயர்பெறு மென்றுங் கூறுவதொரு கதையையுங் கொள்ளலாம். வட்டம்-வருத்தம். (418) வேறு. 82.-அரக்கனைக்கொன்றபின்வீமன் அப்பாற்செல்லல். ஏற்றத்தோ டிகலி யிவ்வா றிடைவழி யதனில் வந்து சீற்றத்தோ டெதிர்ந்த வெம்போர்த் திண்டிற லரக்கன் றன்னைப் பாற்றுக்கும் பகுவாய்ப் பேய்க்கும் பருந்துக்கும் வருந்து கின்ற கூற்றுக்கும் விருந்து செய்தக் கொற்றவேற் குரிசில் போனான். |
(இ - ள்.) அகொற்றம் வேல் குரிசில் - வெற்றியுடைய வேலாயுதத்தையுடைய பெருமையிற்சிறந்த அவ்வீமன், இ ஆறு-இந்தப்படி, ஏற்றத்தோடு - பெருமையுடனே, இகலி - போர் செய்து, இடைவழியதனில் வந்து சீற்றத்தோடு எதிர்ந்த வெம்போர் திண்திறல் அரக்கன் தன்னை- நடுவழியிலேவந்து கோபத்துடனே எதிர்ப்பட்ட கொடிய போரையும் மிக்க வலிமையையுமுடைய புண்டரீகனென்னுமிராக்கதனை,வருந்துகின்ற பாற்றுக்குஉம் பகு வாய் பேய்க்கும்உம் பருந்துக்குஉம் கூற்றுக்குஉம் விருந்து செய்து - (பசியால்) வருந்துகிற கழுகுகளுக்கும் திறந்த |