வாயையுடையபேய்களுக்கும் பருந்துகளுக்கும் யமனுக்கும் விருந்துணவாக அளித்து [கொன்றுவிட்டு],போனான்- அப்பாற் சென்றான்;(எ - று.) பெரியவடிவமாதலால், இத்தனைக்கும்உணவாம். வருந்துகின்ற என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டுக;பகுவாய் என்பதையும் அப்படியே கூட்டலாம். வருந்துகின்ற என்பதற்கு -(இவ்வரக்கனுயிரையுணவாகக் கொள்ளவேண்டுமென்னும் அவாவால்)வருந்துகிற என்றும் கூறுவர். கூற்றுவருந்துவது இதுவரையில்இவ்வரக்கனையுண்ணமுடியாமையால் என்க. வழியிடை - இடைவழியெனமுன்பின்னாகமாறினது, இலக்கணப்போலி.
இதுமுதல்இருபத்தைந்துகவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்;இவற்றில்மூன்று ஆறாஞ்சீர்கள்தேமாச்சீர்களாகவே நிற்கும். (419) 83.-வீமன்அளகாபுரியைக் காணுதல். எண்டிசையமரர்போற்று மிந்துமால்வரைசென்றெய்திப் புண்டரீகன்றனாடுபொருக்கெனநெருக்கியப்பால் தெண்டிரையளித்ததெய்வச் செல்வமாநிதிகளோங்கும் அண்டர்மாநகருமொவ்வா வளகைமாநகரங்கண்டான். | (இ - ள்.)(வீமன்),-எண் திசை அமரர் போற்றும் - எட்டுத் திக்குக்களிலுமுள்ள (இந்திரன் முதலிய) தேவர்களாற் புகழப்படுகின்ற, மால் இந்து வரை-பெரிய சந்திரசைலமென்னும்மலையை,சென்று எய்தி - போய்ச் சேர்ந்து, புண்டரீகன் தன் நாடு பொருக்கென நெருக்கி - புண்டரீகனென்னும் அரக்கனுடைய நாட்டின் எல்லையைவிரைவாகக் கடந்து, அப்பால் - அதன்பின்பு, தெள் திரை அளித்த தெய்வம் செல்வம் மா நிதிகள் ஓங்கும் - தெளிவான அலைகளையுடையபாற்கடலாற் பெறப்பட்ட தெய்வத்தன்மையுள்ள செல்வம்நிறைந்த பெரியநிதிகள் சிறந்திருக்கப்பெற்ற, அண்டர் மா நகர்உம் ஒவ்வா அளகை மா நகரம் - தேவர்களுடைய பெரிய அமராவதிநகரமும் (தனக்கு) ஒப்பாகப்பெறாதசிறந்த அளகாபுரியை, கண்டான் - பார்த்தான்;(எ-று.) எண்திசையமரர்- அஷ்டதிக்குப் பாலகர்;அவராவார் - கிழக்கிலிருந்து முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன்என்பவர். இந்து - சந்திரன்;வடசொல். வரை - மலை. சந்திரசைலம் - புண்டரீகனது நாட்டுக்கு வடதிசையெல்லையாகவுள்ளது. பொருக்கென - விரைவுக்குறிப்பு இடைச்சொல். புண்டரீகன்றனாடும்பொருக்கெனநோக்கியென்ற பாடத்துக்கு - பிரமலோகத்தையும் விரைந்துபார்த்து என்று உரைத்து, மிகவோங்கிய மலையிலேறியதனால்பிரமலோகமும் பார்க்கலாயிற்றென்க. நிதிகள் - சங்கநிதி பதுமநிதி முதலியன. |