பக்கம் எண் :

274பாரதம்ஆரணிய பருவம்

துள்ள ஒளியையுடையகோரதந்தங்களையுடையவர்களும், வஞ்சம் தீயிடை
சோரி தோய்ந்து திரண்டு என சுழல் செம் கண்ணர் - வஞ்சனையையுடைய
நெருப்பிலே இரத்தமானது தோய்ந்து திரண்ட உருப்பெற்றாற்போலச்
சுழல்கின்ற சிவந்த கண்களையுடையவர்களும்,-(எ-று.)-ஆயிடைக்
குறுகுமெல்லைஎன்றதொடர் 'சோலையெல்லாம்மொய்த்தார்'என, மேல்
89-ஆங் கவியில் முடியும்.  அப்பொழில் துப்பிற்காப்போர் என்பது
முதலியன அரக்கர்க்கு விசேடணம்.

     பிறைகள் எனப்பன்மையாகக் கூறினது, இல்பொருளுவமை. சொரிவது
சோரி, ஏதுப்பெயர். 'தீயிடைச்சோரி தோய்ந்து திரண்டு' என்ற உவமை -
மிக்கசெந்நிறத்தையும், பயங்கரத் தன்மையையும் விளக்குதற்கு.
வாயிடைஎயிற்றர் என இயையும்.  சுழல் கண்-விழிசுழலுங்கண்.  தீக்கு
வஞ்சனை-அருகிலுள்ளபொருள்களையெல்லாந்தன்வயத்த தாக்கல்: இனி,
வஞ்சம் என்னும் அடைமொழியைக் கண்ணுக்கும் இயைக்கலாம்.
அ+இடை=ஆயிடை: நீண்ட சுட்டின்முன் யகரந்தோன்றிற்று: [நன்- உயிர்
-13]சேய்-சேய்மையென்னும் பண்புப்பெயர் ஈறுபோயிற்று.  இடை - இடம்.
பிறைவா ளென்ன என்றும் பாடம்.                          (422)

86.சூழிருட்பிழம்புநஞ்சு தோய்ந்தன்னதுவக்கருன்னுன்
நாழிகையொன்றினெல்லா வுலகையுநலியுமீட்டார்
வாழிமந்தரமத்தாக வாசுகிகயிறாமாயோன்
ஆழிநீர்கடைந்தநாளு மமுதெழக்கடைந்தவீரர்.

     (இ-ள்.) சூழ்இருள் பிழம்பு - (உலகத்தைச்) சூழ்ந்து நிறைந்திருக்கிற
இருளின் திரளும், நஞ்சு - விஷமும், தோய்ந்து அன்ன - (ஒன்றோடொன்று)
கலந்தாற்போன்ற, [மிகக்கரிய],துவக்கர் -உடம்பையுடையவர்களும், உன்னின் -
ஆராய்ந்து நோக்குமிடத்து, நாழிகை ஒன்றின்-ஒருநாழிகைப்பொழுதினுள்ளே,
எல்லா உலகைஉம் நலியும் - உலகங்களையெல்லாம் வருத்தவல்ல, ஈட்டார் -
வலிமையுடையவர்களும், மந்தரம் மத்து ஆகி-மந்தரகிரி மத்தாயிருக்க, வாசுகி
கயிறு ஆ - வாசுகியென்னும் பாம்பைக் கடைகயிறாக(க்கொண்டு), மாயோன் -
மாயையையுடைய திருமால், அமுதுஎழ - அமிர்தமுண்டாகும்படி, ஆழி நீர்
கடைந்த நாள்உம் - கடல் நீரைக் கடைந்தகாலத்திலும், கடைந்த -
(உடனிருந்து) கடைந்த, வீரர்-வீரத்தன்மையுடையவர்களும்,-(எ-று.)வாழி-
அசை.

     துவக்கு=த்வக்: வடமொழித்திரிபு;தோலின்பெயரான இது,
சினையாகுபெயராய், உடம்பைக் குறிக்கும்: "தோல்வற்றிச்,சாயினிஞ்
சான்றாண்மைகுன்றாமை"என்றவிடத்து 'தோல்'என்பது போல.  ஈடு -
தேகவலிமை மத்து-மந்தம் என்னும் வடமொழித் திரிபு.  கடைகயிறாகிய
வாசுகியென்னும் பாம்பின் தலையைப்பிடித்துநின்ற அசுரர்க்கும் வாலைப்
பிடித்துநின்ற தேவர்க்குங் கடைதற்கேற்ற ஆற்றலில்லாமையைக் கருதித்
திருமால் இரண்டுவடிவங்