94.-வீமன்கூறிய மறுமொழி. தனிதமேகம்போலார்க்கும் நுமதுயிர்சரத்திற்சாய்த்திப் புனிதவான்பொழிலில்வாசப் புதுமலர்கொய்யவந்தேன் குனிதவர்கொண்டுமுன்னுங் குலங்கரிசறுத்தவீரன் மனிதனோவானுளானோமறத்திரோவஞ்சரென்றான். |
(இ-ள்.)'தனி தம் மேகம் போல் - இடியையுடைய மேகங்கள் போல ஆர்க்கும் - ஆரவாரிக்கிற, நுமது - உங்களுடைய, உயிர்-பிராணனை, சரத்தின் - (எனது) அம்புகளால், சாய்த்தி - ஒழியச் செய்து, புனிதம் வான் பொழிலில் - பரிசுத்தமாகவுள்ள சிறந்த இச்சோலையிலே,வாசம் புது மலர் கொய்ய - பரிமளத்தையுடைய புதிதாய்மலர்ந்த பூக்களைப்பறித்தற்கு, வந்தேன்-;முன் - முன்காலத்திலே [திரேதாயுகத்திலே],குனி தவர் கொண்டு - வளைந்த(கோதண்டமென்னும்) வில்லைக்கொண்டு, நும் குலம் - உங்கள் கூட்டத்தை [ராக்ஷசசமூகத்தை],கரிசு அறுத்த - குற்றம் நீங்க அழித்த, வீரன் - வீரத்தன்மையுள்ள இராமபிரான், மனிதன்ஓவான் உளான்ஓ-மனிதனோதேவனோ? [தேவனல்லன்,மனிதனேயன்றோ]; வஞ்சர் - வஞ்சனையுடையவர்களே! மறத்திர்ஓ-(அதனை)மறந்து விட்டீர்களோ?'என்றான்- என்று (அரக்கரை நோக்கி வீமன்) கூறினான்; (எ-று.) இராமன் மனிதனாயினும்இராவணாதிராக்ஷசர்பலரை வேரறுத்ததுபோல, நானும் மனிதனாயினும்அரக்கராகிய உங்களையெல்லாம் அழித்திட வல்லே னென்றவாறாம். கொடிய அரக்கராகிய உங்களை ஒழித்தபின்பே சோலைபரிசுத்தமாகு மென்பான், 'நுமதுயிர்சரத்திற்சாய்த்தி' என்றதன்பின் 'புனிதவான்பொழில்'என்றான். ஸ்தநிதம் - வடசொல். சாய்த்தி-பிறவினை வினையெச்சம். 'சாய்த்து'என்றும் 'கருவறுத்த' என்றும் பாடங்கள் உண்டு. குனி தவர்-வினைத்தொகை.முன் உம் என்றும் பிரிக்கலாம். (431) 95.-இதுமுதல்ஆறுகவிகள் - அரக்கர் வீமனைச்சூழ்ந்து கொண்டு பொரஅவ்வீமன் அவர்களையழித்தமைகூறும். மாவிந்தமனையபொற்றோண்மாருதிவாய்மைகேட்டுப் பூவிந்தவனத்தினீயோ பறித்தியென்றழன்றுபொங்கி நாவிந்தவுரைதந்தின்னு மிருப்பதோநரனுக்கென்னாக் கோவிந்தனெடுத்தகுன்றிற் கொண்டலின்குழாத்திற்சூழ்ந்தார். |
(இ-ள்.) மாவிந்தம் அனைய- உயர்ந்த விந்தியமலையையொத்த, பொன் தோள் - அழகிய புயங்களையுடையமாருதி - வாயுகுமாரனான வீமனது, வாய்மை - வாயிலிருந்து வந்த வார்த்தையை, கேட்டு-(அரக்கர்கள்) செவியுற்று, 'நீஓ இந்த வனத்தில் பூ பறித்தி- நீயா இச்சோலையில்மலர் கொய்திடுவாய்!'என்று - என்றுகூறி, அழன்று பொங்கி - சீற்றங்கொண்டு எழுந்து, இந்த உரை தந்து இன்னும் நரனுக்கு நா இருப்பதுஓ என்னா-'இப் |