பேச்சுப்பேசிஇதன்பின்பும் இந்த மனிதனுக்கு நாக்குத் துணிக்கப்படாமலிருப்பது தகுதியோ!'என்றுங் கூறி, கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் - கண்ணபிரான் (குடையாக) எடுத்துப்பிடித்த கோவர்த்தன மலைமீது(சூழ்ந்த) மேகக்கூட்டம் போல, சூழ்ந்தார்-(வீமனைச்) சூழ்ந்துகொண்டார்கள்;(எ-று.) திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக இந்திரனையாராதித்தற்கென்று சமைத்தசோற்றைக் கண்ணன் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்குஇடச்சொல்லித் தானே ஒரு தேவதாரூபமாய் அமுதுசெய்தருள, அவ்விந்திரன் பசிக்கோபத்தாலே புஷ்கலாவர்த்தம்முதலிய மேகங்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான இடையருக்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையைஎடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத்தடுத்து எல்லா வுயிர்களையும்இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பது கதை. கோவிந்தன் என்னும் வடசொல்லுக்கு - உயிர்களைக்காப்பவனென்றும், பசுக்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள் கொள்ளப்படும். பருமையும் வலிமையும் பற்றிக் கோவர்த்தனத்தை வீமன்வடிவுக்கும், கருமையும் பருமையும்பற்றி மேகத்தை அரக்கர்க்கும் உவமை கூறினார்.நீயோ, ஓகாரம் - இழிபு. கோவிந்தன்றடுத்த என்று பிரதிபேதம். (432) 96. | வானகமறையவீசி வான்படைக்கலங்கள்வால சேனனேமுதலாவுள்ள சேனையின்றலைவரார்த்தார் கானுடைத்தொடையலானுங் காலனுக்காவியன்ன தானுடைத்தண்டமேந்திப் புகுந்தனன்சலிப்பிலாதான். |
(இ-ள்.) (அப்பொழுது), வாலசேனன்ஏ முதல்ஆ உள்ள - வாலசேனனென்பவனை ஆதியாகவுடைய, சேனையின் தலைவர் - இராக்கத சேனைத்தலைவர்கள், வான் அகம் மறைய - ஆகாயத்தினிடம் முழுவதும் மறைபடும்படி, வான் படைக்கலங்கள் வீசி-சிறந்த ஆயுதங்களை வீசியெறிந்துகொண்டு, ஆர்த்தார் - ஆரவாரித்தார்கள்; சலிப்பு இலாதான்- (போர் செய்வதில்) வெறுத்தலில்லாதவனான, கான்உடை தொடையலான்உம்- வாசனையையுடையமாலையையுடையவீமனும், காலனுக்கு ஆவி அன்ன தான் உடைதண்டம் ஏந்தி-யமனுக்கு உயிரையொத்து உதவுவதான தான் உரிமையாகக் கொண்டுள்ள (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தை எடுத்துக்கொண்டு, (அவ்வரக்கர் கூட்டத்தில்), புகுந்தனன்-;(எ-று.) வாலசேனன் -பாலஸேநன் என்னும் வடசொல்லின் திரிபு: இளையோர்குழாத்தையுடையவனென்று பொருள். யமனாற் கொல்லத்தகாதவர்களையும்கொன்று தருதலால், யமனுக்கு இது இன்றியமையாத துணைஎன்பார்'காலனுக்குஆவியன்ன தண்டம்'என்றார். |