108.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமன் செய்கையைக் காவலாளர் கூற,குபேரன் வெகுளல். எம்பெருமானிது கேட்டியென்றிறைஞ்சி வம்பவிழ்சோலையிடத்தோர்மனிதன்வந்து பம்பியசேனையிடத்தேழ்மதமும்பாயும் உம்பலின்வாவிபு குந்துழக்குகின்றான். |
(இ-ள்.)'எம்பெருமான்- எங்கள் தலைவனே! இது கேட்டி (யாம் சொல்லும்) இதனைக்கேட்பாய்,'என்று - என்றுகூறி, (சோலைக் காவற்காரர்), இறைஞ்சி - (குபேரனை)வணங்கி, 'வம்புஅவிழ் சோலை இடத்து - வாசனைவீசுகிற (நமது) பூஞ்சோலையினிடத்திலே,ஓர் மனிதன் வந்து - ஒரு மநுஷ்யன் வந்து, வாவி புகுந்து - (அச்சோலையிலுள்ள) பொய்கையிலு மிறங்கி, பம்பிய சேனைஇடத்து - நெருங்கிப்பொருத (நமது) சேனையினிடத்திலே,ஏழ் மதம்உம் பாயும் உம்பலின் - எழுவகை மதங்களும் பாயப்பெற்றதோ ராண்யானைபோல,உழக்குகின்றான்- கலக்குகின்றான்;(எ-று.)-'என்றுஇசைத்தல் கேட்டு'என மேலே தொடரும். ஏழ்மதம் -இரண்டு கண்கள், இரண்டு கன்னங்கள், இரண்டு துதிக்கைத் துளைகள்,ஆண்குறி என்னும் ஏழிடங்களினின்று பாய்வன. இனி, வாவி புகுந்து ஏழ்மதமும் பாயும்உம்பலின் பம்பிய சேனையிடத்து உழக்குகின்றான்என அந்வயித்து, ஒருபெரிய நீர் நிலையிலிறங்கிமிக்க மதத்தையுடைய யானைஅதனைக்கலக்குமாறு போல நிறைந்த நமது சேனையிற்புகுந்து அதனைக்கலக்குகிறான்என்றும் பொருள் கொள்ளலாம். (445) 109. | என்றவர்வாய்கைபு தைத்திசைத்தல்கேட்டுக் குன்றுடனொன்றுபுயங்குலுங்கநக்குக் கன்றியசிந்தைய னங்கிகால்செங்கண்ணான் ஒன்றியமங்குலி னீடுருத்துரைத்தான். |
(இ-ள்.) என்று-,அவர்-அக்காவற்காரர், வாய் கை புதைத்து - (தமது) வாயைக் கையால் மறைத்துக்கொண்டு, இசைத்தல்-சொன்னதை, கேட்டு - (குபேரன்) செவியுற்று, குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு - மலைகளோடொத்த(தனது) தோள்கள் குலுங்கும்படி (வெகுளியாற் பெருஞ்சிரிப்புச்) சிரித்து, கன்றிய சிந்தையன் - தபித்த மனமுடையவனும், அங்கி கால் செம் கண்ணான்- நெருப்பையுமிழுஞ் சிவந்த கண்களையுடையவனுமாய்,ஒன்றிய மங்குலின் நீடு உருத்து - (நீரோடு) பொருந்தின மேகம் (இடியைக் கொள்ளுமாறு) போல மிகக் கோபங்கொண்டு, உரைத்தான்-(சில வார்த்தைகளைச்)சொல்பவனானான்; (எ-று.)-அவற்றைமேற்கவியிற்காண்க. வாய் கைபுதைத்தல்-பெரியோர்களிடத்துத் தமது வணக்கத்தை விளக்குவது. கோபத்தால் மிகச் சிவந்த கண்களின் மிக்க |