பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்289

தனி யொப்பவரான,இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்-யக்ஷர்களுடைய
மரபிலே நன்குமதிக்கப்படுகிற சேனைத்தலைவர்கள்,துன்னு படை
கடலோடுஉம்-நெருங்கிநின்ற (தமது) சேனாசமுத்திரத்துடனே,பொங்கி-
(போரில்) ஊக்கம்மிக்கு, மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன்
தன்னை-நிலைபெற்றகுருவென்னும் அரசனது மரபிலே பிறந்த
அரசர்களுக்கெல்லாந் தலைவனானவீமசேனனை,சூழ்ந்தார்-
வளைந்துகொண்டார்கள்;(எ-று.)

    குரு-சந்திரகுலத்துப் பிரசித்திபெற்ற ஓரரசன்-  வீமனை'குருக்கள்
குலத்து மன்னர்மன்னன்'என்றது, அவனது பெருந்தகைமையை விளக்க.
படைக்கடல்-கடல்போற் பரவிய சேனை. மன்னு-(அவ்விடத்தில்) வந்து
சேர்ந்த, மன்னன் என்றுமாம்.  படைக்கலமோடும் என்று பிரதிபேதம். (449)

113.-இயக்கரிடைநின்றவீமன் வருணனை.

மானவ ரக்கர்கு லத்தைவானிலேற்றி
ஊனொடிரத்தமு குக்குஞ்சோலையூடே
தானைவளைத்திடநின்றசாபவீரன்
யானையினங்கள்வளைக்கும்யாளிபோன்றான்.

     (இ-ள்.) மானம் அரக்கர் குலத்தை வானில் ஏற்றி-
அகங்காரத்தையுடைய இராக்கதர்கூட்டத்தை (முன்னே போரிற்கொன்று)
வீரசுவர்க்கத்திற் சேரச்செய்துவிட்டு, ஊனொடுஇரத்தம் உகுக்கும்
சோலையூடே-(அவ்வரக்கர்களது)தசையுங் குருதியுஞ் சிந்திக்கிடக்கப்பெற்ற
அச்சோலையிலே,தானைவளைத்திட-(இப்பொழுது)இயக்கர்சேனை
(தன்னைச்)சூழ்ந்திட, நின்ற-(அதனிடையிலே) நின்ற, சாபம் வீரன்-வில்லில்
வல்ல வீரனானவீமன், யானைஇனங்கள் வளைக்கும்யாளி போன்றான்-
யானைக்கூட்டங்களாற்சூழப்படும்யாளியைப் போன்றான்;(எ-று.)

     யாளி-யானையைக்கொல்வதும்,சிங்கம்போல்வதும்,
துதிக்கையுடையதுமாகியதொரு மிருகவிசேடம்.  பல யானைகள்ஒருங்கு
சூழ்ந்தும் ஒருயாளியை ஒன்றும் ஊறுசெய்யமாட்டாமல் அதனால்தாம்
அழிக்கப்படுவதுபோல, பல  இயக்கர்கள் கூடிவளைத்தும்வீமனையாதும்
நலிவுசெய்ய இயலாது அவனால்தாம் மேல் அழிதல் பற்றி, இவ்வுவமை
கூறப்பட்டது.  யாளி-சிங்கமென்றுங் கொள்ளலாம்.  யுத்தகளத்திற்
பின்வாங்காமற் போர்செய்துநின்று பகைவரால் இறந்தவர் வீரசுவர்க்கமடைவ
ரென்னும் நூற்றுணிபால், 'அரக்கர்குலத்தை வானிலேற்றி'என்றார்.  (450)

114.-தன்னைவளைந்தஅரக்கர்மேல் வீமன் சரங்களை
வீசுதல்.

விண்ணிலி யக்கர்ப டைக்கலங்கள்வீசி
எண்ணிலர்சுற்றும்வ ளைத்தெதிர்ந்தபோதில்
வண்ணவ ரிச்சலைகோலிவாயுமைந்தன்
துண்ணெனவுட்கவ டிச்சரங்கடொட்டான்.