(இ-ள்.)விண்ணில் - ஆகாசமார்க்கத்திலே, எண் இலர் இயக்கர் - அளவிறந்தவரான [அநேக]யக்ஷர்கள்,படைக்கலங்கள் வீசி-ஆயுதங்களை மேல் எறிந்துகொண்டு, சுற்றும் வளைத்து-(தன்னைச்)சுற்றிலும் சூழ்ந்து, எதிர்ந்தபோதில்-(தன்னை)எதிர்த்தபொழுது,-வாயுமைந்தன் - காற்றின் மகனானவீமன், வண்ணம் வரி சிலைகோலி-அழகிய கட்டமைந்த வில்லை வளைத்து,துண்ணென உட்க-(அவர்கள்) திடுக்கிட்டு நடுங்கும்படி, வடி சரங்கள் தொட்டான்-கூர்மையான அம்புகளை(அவர்கள்மேல்) எய்தான்; துண்ணென -அச்சக்குறிப்பிடைச்சொல். தொட்டான், தொடு-பகுதி. சுற்றும்-சுற்றிலும்;எப்புறத்தும். (451) 115.-இயக்கசேனைகளிற்சிலசேனையொழியச்சில நிலைகெட்டுஓடுதல். தொட்டசரங்கடு ளைத்துமார்புந்தோளும் முட்டவிசும்பின தெல்லையெங்குமூடப் பட்டதொழிந்துப டாதசேனையெல்லாம் கெட்டனபட்டது ரைக்கவுண்டோகேட்கின். |
(இ-ள்.)தொட்ட சரங்கள்-(வீமனாற்)பிரயோகிக்கப்பட்ட அம்புகள், மார்புஉம் தோள்உம் துளைத்து- (அவ்வியக்கர்களது) மார்பையுந் தோள்களையுந்தொளைசெய்து,விசும்பினது எல்லைஎங்குஉம் முட்ட மூட - ஆகாயத்தினிடம் முழுவதிலும் பொருந்தும்படி பரவி மறைக்க, பட்டது ஒழிந்து-(அவ்வியக்கர் சேனைகளுள்)இறந்தது தவிர, படாத சேனை எல்லாம் - இறவாத சேனைகள்பலவும், கெட்டன-உறுதிநிலைகெட்டு முதுகிட்டோடின;பட்டது-(அச்சேனைகள்அப்போது) அடைந்த நிலைமையை,கேட்கின் - வினாவினால், உரைக்க உண்டுஓ - (நம்மாற்) சொல்ல வகையுண்டோ? [இல்லை]; ஒழிந்து -ஒழிய, எச்சத்திரிபு, ஓ-எதிர்மறை. (452) 116.-சங்கோடணன்புறங்கொடுத்தல். மன்னளகாபதி சேனைநாதன்மார்பில் தன்னடையாளமு றத்தண்டாலேதாக்க மின்னிடைநாகம்வெ ருக்கொண்டென்னமீண்டான் தன்னெதிர்வீரரி லாதசங்கோடணன்றான். |
(இ-ள்.) மன்அளகாபதி சேனைநாதன்மார்பில்-பெரிய அளகாபுரிக்கு அரசனானகுபேரனது படைத்தலைவனாகியசங்கோடணனது மார்பிலே, தன் அடையாளம் உற தண்டாலே தாக்க-தனது தழும்பு படும்படி (வீமன்) கதாயுதத்தாலே அடிக்க,-தன்எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான் - தனக்கு எதிரில் எந்த வீரரும் (இது வரையிற் போரில்) நிற்கப்பெறாத அச்சங்ககோடணன்,-மின்னிடைநாகம் வெரு கொண்டு என்ன - (மேகம்) மின்னுகையில் பாம்பு (இடிக்கு) அச்சங்கொண்டாற்போல, மீண்டான் - (அஞ்சிப் புறங்கொடுத்துத்) திரும்பினான்;(எ-று.) |