பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்291

     தன் எதிர்வீரர் இலாத - தனக்கு ஒப்பானவீரர் எவரையும்பெறாத
என்றும் உரைக்கலாம்.  மின் - இலக்கணையால்இடியைக் காட்டிற்று.
இடியொலியைக் கேட்பினும் நாகம் அஞ்சியொடுங்கும்.          (453)

117.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமனோடு
சமாதானஞ்செய்துகொள்ளும்படி சங்கோடணன்
குபேரனுக்குக் கூறுதல்.

கருத்தொடுசென்றள கேசன்பாதகமலம்
சிரத்தினில்வைத்திவை நின்றுசெப்பலுற்றான்
உருத்திரன்மானுட வுருவங்கொண்டதன்றேல்
வரத்திவன்மானுட னல்லன்மன்னவென்றே.

     (இ-ள்.)சென்று - போய், அளகேசன் பாதகமலம் - அளகாபுரிக்கு
அரசனானகுபேரனது திருவடித்தாமரைமலர்களை,கருத்தொடு-மனத்தில்
அன்புடனே, சிரத்தினில் வைத்து-(தனது) தலையின்மேற்கொண்டு
[சாஷ்டாங்கமாகத்தெண்டனிட்டு],நின்று-(அருகில்) நின்று, இவை -
இவ்வார்த்தைகளை,செப்பல் உற்றான்-கூறத்தொடங்கினான்:-(அவை
யாவையெனின்), 'மன்ன-அரசனே! உருத்திரன் மானுட உருவம் கொண்டது
- (அழித்தற்றொழிற்கடவுளான)சிவபெருமான் இம்மனித
வடிவத்தைக்கொண்ட தன்மையாதல்வேண்டும்;அன்றுஏல் - அவ்வாறன்றி,
வரத்து இவன்-மேன்மையுடைய இவ்வீரன், மானுடன் அல்லன்-சாதாரண
மனிதனாகமாட்டான்,'என்று - என்றுகூறி,-(எ-று.)-என்றான்என
மேற்கவியில் தொடரும்.

    அளகா+ஈசன்=அளகேசன்: உருத்திரன்=ருத்திரன்: [நன்-பத-21,22].
வரத்து-வருதலையுடையஎன்றுமாம்;தொழிற்பெயர்.

118.பண்புடனிக்கணம் வேண்டுநிதிகள்பலவும்
நண்பொடவற்கெதிர் சென்றுநல்காயென்னின்
விண்புகுமிப்புரம் வேந்தவென்றான்மெய்யில்
புண்புகவுட்கியு ழைக்கும்வேழம்போல்வான்.

     (இ-ள்.)'வேந்தே-அரசனே! பண்புடன்-நற்குணத்துடனே, இ கணம்-
இந்தக்ஷணத்திலே, அவற்கு எதிர் சென்று-அம்மனிதனுக்கு எதிரிற்போய்,
வேண்டும் நிதிகள் பலஉம்-(அவன்) விரும்பும் பலவகைச் செல்வங்களையும்,
நண்பொடு-சினேக வகையால், நல்காய் என்னின்-(நீ)கொடாதொழிவையானால்,
இ புரம் - இந்த நகரத்துப் பிராணிவர்க்கம்முழுவதும், விண் புகும் - (இறந்து)
மேலுலகத்தையடையும்,'என்றான்-என்று(குபேரனைநோக்கிக்) கூறினான்: 
(யாரென்னில்), மெய்யில் புண் புக உட்கிஉழைக்கும் வேழம் போல்வான்-
(தன்) உடம்பில் விரணமுண்டாக (அதனால்)ஒடுங்கி வருந்துகின்ற யானையை
ஒப்பவனாகியசங்கோடணனென்னுஞ்சேனைத்தலைவன்;(எ-று.)