"தந்தைசொல்மிக்க மந்திரமில்லை"என்றவாறு பிதிருவாக்கியத்தை நன்கு மதித்தமை தோன்ற, 'தந்தையுரைத்தருள்வாய்மை தலைமேற்கொள்ளா' என்றது. (457) 121.-உருத்திரசேனன்வீமனைவினாவுதல். கண்டுமருத்தருள் காளைதன்னைநோக்கி வண்டுமிடைப்பயி லாதகாவில்வந்து மிண்டுமரக்கர்கு லத்தைவீணேயாவி கொண்டுபடுத்தனையார்நீகூறுகென்றான். |
(இ-ள்.) கண்டு- (அங்ஙனம்) பார்த்து, (உருத்திரசேனன்), மருத்து அருள் காளைதன்னைநோக்கி - வாயுதேவன் பெற்ற குமாரனான வீமனைப்பார்த்து, 'வண்டுஉம்இடை பயிலாத காவில் வந்து-வண்டுகளும் உள்ளிடத்திலே வந்து நுழையப்பெறாத[மிக்ககாவலையுடைய] இச்சோலையிலே(நீ) வந்து, மிண்டும் அரக்கர் குலத்தை-(அங்குக் காவலாக) நெருங்கியுள்ள இராக்கதர்கூட்டத்தை, வீணே ஆவி கொண்டு படுத்தனை- வீணாய்உயிரை (உடம்பினின்றுங்) கொண்டு [கொன்று]அழித்தாய்;நீ யார் கூறுக-நீ யார் சொல்வாயாக,'என்றான்- என்று கூறினான்;(எ-று.) காளை-இளவெருது;வீமனுக்கு உவமையாகுபெயர். 'வண்டும்'என்ற சிறப்பும்மை, அதற்குப் பூவிடத்துரிய தன்மையை விளக்கும். காக்கப்படுவது, கா;காரணக்குறி. (458) 122.-வீமசேனன்உருத்திரசேனனுக்குத் தன்னைத் தெரிவித்தல். நின்னளகாபதி மைந்தர்சாபநீக்க முன்மருதூடுதவழ்ந்த வாகைமொய்ம்பற்கு இன்னருண்மைத்துனன் மண்ணில்யாரும்போற்றும் மன்னவன்வீமன்மருத்தின் மைந்தனென்றான். |
(இ-ள்.)'நின்அளகாபதி மைந்தர் சாபம் நீக்க - உனது தந்தையான இந்த அளகாபுரிக்கு அரசனானகுபேரனது குமாரர்களின் சாபத்தை ஒழித்தற்பொருட்டு, முன் - முன்னொருகாலத்திலே, மருது ஊடு தவழ்ந்த - மருத மரங்களினிடையே தவழ்ந்து சென்ற, வாகை மொய்ம்பற்கு-(வெற்றிக்கு அறிகுறியான) வாகை மரப்பூமாலையைச்சூடிய தோள்களையுடைய கண்ணபிரானுக்கு, இன் அருள் மைத்துனன் - இனிய கருணைக்கு விஷயமான மைத்துனனாவேன்: மண்ணில் யார்உம் போற்றும் மன்னவன் - நிலவுலகத்தில் எல்லோரும் புகழும் அரசகுலத்தவனாவேன்; வீமன் - வீமனென்னும் பெயருடையேன்: மருத்தின் மைந்தன் - வாயுகுமாரனா வேன் (யான்),'என்றான்-என்று(வீமன்) கூறினான், (எ-று.) கண்ணன்குழந்தையாயிருக்குங் கலாத்தில் துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச்செய்யக் கண்டு கோபித்த யசோதை |