ஒருநாள் கிருஷ்ணனைத்திருவயிற்றிற் கயிற்றாற்கட்டிஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவேஎழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப்பட்டபடியினால்அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில், முன் நாரத சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங் குபேரபுத்திர ரிருவரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பது கதை;அத்தை மகனைமைத்துனனென்பது முற்காலத்து வழக்கம். கண்ணனது தந்தையான வசுதேவருக்குக் குந்தி உடன்பிறந்த முறையாதல் பற்றி, வீமன் கண்ணனுக்கு மைத்துனனாவன். மைத்துனன், மன்னவன், வீமன், மருத்தின் மைந்தன் - தன்மையிற் படர்க்கை. (459) 123.-வீமனைஉருத்திரசேனன் அங்குவந்த காரணம்வினாவ,வீமன் கூறினமை. மாயவனற்புதனாதன்கண்ணன்வையம் தாயவன்மைத்துன னாகினையதனிநீ ஏயவனத்தினில் வந்ததென்கொலென்றான் தூயவனுற்றன யாவுந்தோன்றச்சொன்னான். |
(இ - ள்.)'ஐய-ஐயனே!நீ-, மாயவன் - மாயையுடையவனும், அற்புதன் - ஆச்சரியகரமான குணஞ் செயல்களையுடையவனும்,நாதன் - (யாவர்க்குந்) தலைவனும்,வையம் தாயவன் - உலகங்களைஅளவிட்டவனும் ஆகிய, கண்ணன் - க்ருஷ்ணபகவானுக்கு, மைத்துனன் ஆகின் - அத்தைமைந்தனாவையானால், தனி - தனியே, ஏய வனத்தினில் வந்தது - பொருந்தின இச்சோலையில்வந்திட்டது, என்கொல்-என்ன காரணத்தாலோ?' என்றான்- என்று வினவினான்:(அப்பொழுது), தூயவன்- பரிசுத்தகுணமுடைய வீமன், உற்றன யாஉம்-நடந்த செய்திகளையெல்லாம், தோன்றச்சொன்னான்-; அற்புதன்-அத்புதன்;கண்ணன்-க்ருஷ்ணன்:வடசொற்றிரிபுகள். வாமனனானதிருமால் பலிசக்கரவர்த்தியினிடம் மூவடி மண்பெற்றுத் திரிவிக்கிரமனாகிஆகாயத்தையளவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும் மற்றோரடியால்விண்ணையும்அளந்து மூன்றாமடிக்காகஅவன் சொன்னபடி அவன் தலைமேற்காலைவைத்துஅவனைப்பாதாளத்திலழுத்தி அடக்கினா னாதலால்,'வையந்தாயவன்'என்றது. தாயவன்-தா-பகுதி:இதுவே உகரச்சாரியை பெற்றுத் தாவு என நிற்பது. ஏய - ஏய் என்னும் பகுதியடியாப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்;ய் என்னும் இறந்தகால இடைநிலைவரத்தனிக்குறிலைச்சாராதபகுதியீற்றுகரங் கெட்டது. (460) 124.-வீமன் வேண்டியமலரை அவனுக்குக் கொடுத்து அனுப்பிவிட்டு,உருத்திரசேனன் நிகழ்ந்த செய்தியைத் தாதையிடங் கூறல். மற்றவனவ்வுரை கூறமகிழ்வொடந்தண் பொற்றருநண்பின் வழங்கிப்போகென்றருளி |
|