பக்கம் எண் :

296பாரதம்ஆரணிய பருவம்

முதலிய கொடியவர்பலரை அழித்து நல்லோர்களைக்காத்திடுதலாலும்,
அது யமனுக்கு உறவாதல் - அவனது கொலைத்தொழிலைத்தான்
மேற்பூண்டு நடத்துதலாலு மென்க.  அளவிறந்த பேய்கள் வந்து ஆடுதல்,
தமக்கு மிக்க தசையுணவு கிடைத்ததனாலாகியகளிப்பின் மிகுதியாலாகும்.
மறல்-கொடுமை:அதையுடையவன், மறலி.

     இதுமுதற் பதினான்குகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.                        (462)

126.-வீமனைக்காணாதுதருமபுத்திரன் திரௌபதியை
    வினாவல்.

இவ்வாறிவன்செய்கையிவன்வந்த தறியாமலெழில்கூர்வனத்து
அவ்வாறுபயில்கின்றவருள்வாரி தானுற்றவதுகூறுவாம்
கைவார்கதைக்காளையைக்கண்ணுறச்சூழல்காணாதுமுன்
செவ்வாய்மடப்பாவைநின்றாளைநீகூறெனச்செப்பினான்.

     (இ - ள்.)இவன் செய்கை-இவ்வீமனது செய்தி, இ ஆறு-இவ்விதமாம்;
எழில் கூர் வனத்து - அழகுமிக்க காட்டிலே, அ ஆறு பயில்கின்ற -
அவ்விதமாகப் பொருந்தி வசிக்கிற, அருள் வாரி - கருணைக்கடலான
தருமபுத்திரன், இவன் வந்தது அறியாமல் - இவ்வீமன் (இங்ஙனம் இங்கு)
வந்ததையுணராமல், உற்ற அது-அடைந்த அக்கவலையை,கூறுவாம்-
சொல்லத் தொடங்குவோம்:கை வார் கதை காளையை- கையில் நீண்ட
கதாயுதத்தையுடைய இளவீரனானவீமனை,சூழல் - (தாம்)
வசிக்குமிடத்திலே, கண்உற காணாது- கண்களிற்படும்படி காணாமல்,
(தருமபுத்திரன்), முன் செம் வாய் மடம் பாவை நின்றாளை- எதிரில்நின்ற
சிவந்த வாயையுடைய இளையசித்திரப்பதுமைபோலழகிய திரௌபதியை
(நோக்கி), நீ கூறு என செப்பினான்-(வீமன்சென்றஇடத்தை) நீ
சொல்வாயென்று வினவினான்;(எ-று.)

     எழில்கூர்வனம்என்றது, இங்கே காந்தர்ப்பமலையைச்சார்ந்த
காட்டை.  அவ்வாறு என்ற சுட்டு, கீழ்ப் பதினோராங்கவியில்
"அம்முனிவன்மொழிப்படியே வரம்பில் கேள்வி யறன்மகனுந்
தம்பியருமரிவையோடு, மெம்முகமுந் தம்முகமா விலையுங்காயு
மினியகனியுடனருந்தி யிருக்கு நாளில்"என்றதைச் சுட்டும்.  வாரி-
வடசொல்:கடலுக்கு ஆகுபெயர்.  மடம் - ஒரு பெண்மைக்குணமாகவுமாம்;
இது-மற்றைப் பெண்குணங்களுக்கும் உபலக்ஷணம்.              (463)

127.-திரௌபதிநிகழ்ந்தன உரைத்தல்.

வானின்றுமலரொன்றுதன்முன்பு மின்போலவந்துற்றதும்
தானின்றிம்மலர்போலமலர்தேடி நீயின்றுதருகென்றதும்
தேனின்றதொடையானுமளகேச னகர்மீதுதனிசென்றதும்
கானின்றகுழலாளுமன்னற்கு முன்கட்டுரைத்தாளரோ.