பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்297

     (இ-ள்.)வான்நின்று-ஆகாயத்திலிருந்து, மலர் ஒன்று - ஒரு பூ,
மின்போல-மின்னல்போல (விளக்கமுடையதாய்), தன் முன்பு - தனது
எதிரில், வந்துஉற்றதுஉம்-வந்து விழுந்ததையும், தான்நின்று-தான்(வீமன்முன்
சென்று) நின்று, நீ இ மலர்போல மலர் தேடி இன்று தருக என்றதுஉம் - 'நீ
இந்தப் பூவைப்போல இருக்கும் பூவைத்தேடி இன்றே கொணர்ந்து
கொடுக்கவேண்டும்'என்று சொன்னதையும், - தேன் நின்ற
தொடையான்உம்-தேன் இடைவிடாதுநின்ற பூமாலையையுடைய
வீமசேனனும், அளகேசன் நகர்மீது-குபேரனது நகரமாகிய அளகையை
நோக்கி, தனி சென்றதுஉம்-ஒன்றியாய்ப் போனதையும், (ஆகிய இவற்றை),
கான் நின்ற குழலாள்உம்-பரிமளம் இடைவிடாதுநின்ற கூந்தலையுடைய
திரௌபதியும், மன்னற்கு முன் - தருமராசனெதிரிலே, கட்டுரைத்தாள் -
திறம்படக் கூறினாள்;(எ - று.)

     'இம்மலர்போலுமலர்'எனப் பாடங் கொள்ளலாம்.  தனிவேறு
துணையில்லாமல். கான்-செயற்கைமணத்தோடு இயற்கை மணமும்;உத்தம
சாதிமகளிரின் கூந்தலில் இயற்கை நறுமணமுண் டென்றல், மரபு.  அரோ-
ஈற்றசை.                                                (464)

128.-அருச்சுனன்பிரிவால் மனம்நொந்திருந்த தருமன்
வீமன் பிரிவால்பின்னும் வருந்துதல்.

கருமத்தின்வடிவானமடமங்கை யிவ்வாறுகழறாதமுன்
உருமுத்துவசன்மைந்தன்முன்போக வன்போடுமுளநொந்துளான்
மருமத்துவேல்தைத்தபுண்மீது கனலுற்றதெனமாழ்கினான்
தருமத்தினுருவாகியெழுபாரு நிலையிட்டதனியாண்மையான்.

     (இ - ள்.)கருமத்தின் வடிவு ஆன - ஊழ்வினையினது
உருவத்தையொத்த, மட மங்கை-பேதைமைக்குணத்தையுடைய இளம்
பெண்ணானதிரௌபதி, இ ஆறு கழறாதமுன் - இந்தப்படி சொல்லும்முன்னே
[சொன்னவுடனேயென்றபடி],உருமு துவசன் மைந்தன் - இடியின்
வடிவத்தையெழுதின கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன்,
முன் போக - முன்னே (தன்னைவிட்டு) நீங்கிச் சென்றதனால், அன்போடுஉம்
உளம் நொந்து உளான்-(அவனிடத்துள்ள) அன்பினால்
மனம்வருந்தியுள்ளவனான, தருமத்தின் உரு ஆகி எழு பார்உம்
நிலைஇட்ட தனி ஆண்மையான்-அறத்தின் வடிவமாய் எழுவகைத்
தீவுகளாகிய பூமி முழுவதும் அழியாது நிலைநிறுத்தினஒப்பில்லாத
பராக்கிரமத்தையுடைய தருமபுத்திரன், மருமத்து வேல் தைத்த புண்மீது
கனல் உற்றது என மாழ்கினான்-மார்பிலேவேலாயுதம் தைத்தபுண்ணின்மேல்
நெருப்புப் பொருந்தியதுபோல மிகவருந்தினான்; (எ -று.) 

     முன்னமேஅருச்சுனனாகியதம்பி தன்னைநெடுநாளாகப் பிரிந்து
சென்றிருத்தற்காக அவனிடத்து அன்போடு மனம்வருந்தும் யுதிஷ்டிரன்,
இப்போது முதல் தம்பியான வீமனும் விட்டுப் பிரிந்த செய்தியைத்
திரௌபதி கூறக் கேட்டறிந்து அவ்வருத்தத்