தின்மேல்மிக்கவருத்த முற்றானென்பதாம். மூன்றாமடி,துன்பத்தின்மேல் துன்பமடைதற்கு உவமை. "த்வாபரேத்ரௌபதீ ம்ருத்யு:"என்றபடி பூமிக்குப் பாரமாகவுள்ள துரியோதனாதிதுஷ்டவரசர்கள் பலர் இனிப் பாரத யுத்தத்தில் வேரொடு அழிதற்கு மூலம் இராச சபையில் துரியோதனனாற் பரிபவப்படுத்தப்பட்ட திரௌபதியே யாதலால், இவள் அக்கொடியவர்கள் முற்பிறப்பிற் செய்த தீவினைபோலஅவர்களைஅழிப்பவ ளென்பார், 'கருமத்தின்வடிவான மடமங்கை'என்றார்;அன்றியும், பாண்டவர் துரியோதனனாற்சூதாட்டத்தில் நாட்டையிழந்து வனத்தில் வருந்துதற்குக் காரணம், முன்னொருகாலத்துஇந்திரப்பிரத்த நகரத்தில் மாயையில் வல்ல மயனாலேற்படுத்தப்பட்ட பாண்டவர் மாளிகைக்குப் பகைமைகொண்ட துரியோதனன்வந்தபொழுது அங்குள்ள நிலத்தைச் சலமாகவும் சலத்தை நிலமாகவும் வழியைச் சுவராகவும் சுவரை வழியாகவும் இங்ஙனம் ஒன்றை மற்றொன்றாகமாறுபாடாக் கருதி வருந்தித் திகைத்ததை உள்ளிருந்த திரௌபதி நோக்கிப் பரிகாசமாகச் சிரித்ததுவே யாதலால், இவள் பாண்டவர் செய்த ஊழ்வினைபோல்பவளென்னுங்கருத்தால், 'கருமத்தின்வடிவான மட மங்கை' என்றதாகவுங்கொள்ளலாம். இங்கே இங்ஙனங் கூறியது, வீமனைப் பிரிந்து தருமன் வருந்துதலாகிய தீவினைப்பயன்திரௌபதியனுப்பியது காரணமாக நேர்ந்தமையி னென்க. இனி, கருமத்தின் வடிவான மடமங்கை- இல்லற வாழ்க்கைக்குரிய நற்செய்கைகள் தாம் ஒரு பெண்வடிவங்கொண்டு வந்தாற்போன்ற திரௌபதி யென்று உரைப்பாருமுளர்:வேள்விச்சடங்கின் பயனாகத்தோன்றியவளென்னலுமாம். எழுபார்-சம்பு, பிலக்ஷம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன. (465) 129.-அப்போதுதருமன் நினைக்கக்கடோற்கசன் வந்துசேர்தல். வாளிப்பரித்தேர்மனிவ்வாறு துயரெய்திமனனஞ்செயக் கூளிக்குழாம்வானின்மிசையுய்த்த தென்னக்கொடித்தேரின்மேல் காளக்கருங்கொண்டல்போல்வந்து வீமன்றருங்காளைமுன் ஆளிப்பெருங்கொற்றவெற்றித் திருத்தாதையடிமன்னினான். |
(இ - ள்.)வாளி பரி தேர் மன்-அம்புபோல விரைந்து செல்கின்ற குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய தருமராசன், இ ஆறு துயர் எய்தி- இந்தப்படி துன்பமடைந்து, மனனம் செய - (கடோற்கசனை) நினைத்தல்செய்திட,-வீமன்தரும் காளை- வீமசேனன் பெற்ற குமாரனான அக்கடோற்கசன், கூளி குழாம் வானின்மிசை உய்த்தது என்ன - பேய்களின் கூட்டம் ஆகாசமார்க்கத்திலே கொண்டுவந்து செலுத்திய தென்று (கண்டோர்) சொல்ல, கொடி தேரின்மேல்-(பேய்களைக்குதிரைகளாகப் பூட்டப்பட்டுள்ள) துவசத்தையுடைய (தனது) இரதத்தின்மேல், காளம் கரு கொண்டல் போல்-கார்காலத்துக் கரிய நீர்கொண்ட மேகம்போல, வந்து- (விரைவில்) வந்து, முன் - முதலில், ஆளி பெரு கொற்றம் வெற்றி திரு |