தாதை-சிங்கம்போன்ற சிறந்த வலிமையையும் சயத்தையுமுடைய சிறந்த (தனது) பெரிய தந்தையான தருமனது, அடி-பாதங்களில், மன்னினான்- சேர்ந்தான்;(எ-று.) தருமபுத்திரன்நினைத்தமாத்திரத்திற்கடோற்கசன் எதிரில் வந்து வணங்கினானென்பதாம். மநநம் - வடசொல். கூளி-பேய்;"வாணிருத சேகரன்றனது தேரின்மேற், பந்தி பந்தி பதினாயிரம்பதின்மடங்கு கூளிகள் பரிக்கவா, னுந்தி"என்பர், மேல் மணிமான்வதைச் சருக்கத்தும், மேல் மணிமான்வதைச் சருக்கத்தினிறுதியில் "துணங்கைகொண்டலகை கோடி வானின்மிசை துள்ளி யூரு மிரதத்தின்மே, லிணங்கி"என வருதலால், இங்கே கூளியென்பதற்குப் பெருங்கழுகென்று உரைத்தல் பொருந்தாது. காலம் - காளம்:லகரத்துக்கு ளகரம் போலி;இனி, ஒருபொருட்பன்மொழியாய், காளக்கரு - மிகக்கரிய என்றுங் கொள்ளலாம். வீமசேனன் மற்றைப் பாண்டவர் நால்வரையுங் குந்தியையுந் தோளிலேந்திக் கொண்டு அரக்குமாளிகையினின்று தப்பிச் செல்லுகையில், இடிம்பவனமென்னும் பெரிய காட்டை யடைந்து, அங்குத் தன்னை வந்து எதிர்த்த இடிம்பனென்னும் அரக்கனைக் கொன்று தள்ளி, அவ்வரக்க னுடன்பிறந்தவளாகிய இடிம்பி யென்பவள் தன்னைக்காதலித்து மணஞ்செய்யக் கருதினாளைச்சேர்ந்து, அவளிடம் கடோற்கசனென்னும் மகனைப்பெற்றான்:அவன் பின்பு தனது தாதையான வீமனையும், மற்றை அவனுடன் பிறந்தவரையும் விட்டுப் பிரிந்து செல்லுகையில் அன்போடு வணங்கி அவர்கள் தன்னைவேண்டிய காலத்து நினைக்கும்படியாகவும், அங்ஙனம் நினைத்தமாத்திரத்தில் தான் வந்து உதவுவதாகவும் வாக்குத்தத்தஞ் செய்துபோயின னென்பது, கீழ் ஆதிபருவத்து வரலாறாம். என நற்கொடி என்று பிரதிபேதம். (466) 130.-வந்தகடோற்கசனிடத்து வீமன் சென்றிருப்பதைக் கூறித் தருமன்பின்னும் உரைக்கலுறுதல். மின்றாரைபடவெண்ணிலாவீசுமேகங்கொலெனவந்துமுன் நின்றானைமுகநோக்கிநீதிக்கொர்வடிவாமனிவைகூறுவான் உன்றாதைதமியேனொடுயவாமலொருவாசமலர்கொண்டிடச் சென்றானெனச்சிந்தைநொந்தன்புடன்பின்னுமிவைசெப்புவான். |
(இ - ள்.)மின் தாரை பட - மின்னலின் ஒழுங்குபொருந்த, வெள் நிலா வீசும்-வெண்மையான சந்திரகாந்தியையும் வீசுகின்ற, மேகம் கொல் என - மேகமோ என்று உவமை கூறும்படி, முன் வந்து நின்றானை- (செம்மயிர் முடிபொருந்த வெண்மையான கோர தந்தங்களி னொளியுடனே கரியநிறத்தனாய்)எதிரில்வந்து நின்ற கடோற்கசனை,முகம் நோக்கி - முகத்தைப் பார்த்து,-நீதிக்கு ஓர் வடிவு ஆம் மன் - நியாயங்களினது ஒப்பற்ற உருவத்தையொத்த தருமராசன்,-இவை கூறுவான் - இவ்வார்த்தைகளைச்சொல்பவனாய்,'உன்தாதை - உனது தந்தையான வீமன், தமியேனொடுஉயவாமல் - என்னோடுஆராயாமல், ஒரு வாசம் மலர் கொண்டிட- |