நறுமணத்தையுடையதொருபூவைக் கொணர்தற்பொருட்டு, சென்றான்- (அளகாபுரிக்குப்) போய்விட்டான்,'என-என்று கூறி,-சிந்தை நொந்து - மனம் வருந்தி, அன்புடன் - பிரீதியுடனே, பின்னும் - மீண்டும், இவை செப்புவான் - இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;,(எ-று.)-அவற்றை மேற்கவியிற் கூறுகிறார். செம்பட்டமயிருக்கு மின்தாரையையும், வெள்ளெயிற்றுக்கு வெண்ணிலாவையும், கரிய பெரிய வடிவத்துக்குக் காளமேகத்தையும் உவமை கூறினார்.நீதிக்கு ஓர்வடிவாம் நிருபன் - நீதி தவறாதஅரசனென்றபடி;கீழ் "தருமத்தினுருவாகி"என்பதற்குங் கருத்து இவ்வாறே. தனக்கு இரண்டுகைகள் போன்ற வீமஅருச்சுனர் இருவரையும் பிரிந்ததனாலாகிய எளிமைதோன்ற, 'தமியேன்'என்றான். உயவாமல், உயவு - பகுதி: இது உசாவு என்பதன் மரூஉ. வடியா நிருபன் என்றும், உரையாமலென்றும் பாடம். (467) 131.-வீமனுக்குஇடையூறு நேரும்முன் அங்ஙன் நேராதிருக்க நாம்அளகை செல்வோமென்று தருமன் அவன் தேரிலேறுதல். எம்பிக்கொரிடையூறுவந்தெய்து முன்யாமியக்கேசனூர் வம்புற்றமலர்வாவிசென்றெய்தி விரைவோடுவருவோமெனா வெம்புற்றபைங்கானினிடை மின்னுமிளையோருமுடன்மேவவே கம்பிக்குநெஞ்சோடவன்றேரின் மீதக்கணத்தேறினான். |
(இ-ள்.)'எம்பிக்கு- எனது தம்பியான வீமனுக்கு, ஒர் இடையூறுவந்து எய்தும்முன் - யாதாயினுமொரு தீங்கு நேர்தற்கு முன்னமே,- (நேராதிருக்கும்படி), யாம்-நாம், இயக்கேசன் ஊர் -யக்ஷராஜனான குபேரனது அளகாநகரத்திலுள்ள, வம்பு உற்ற - பரிமளம் மிக்க, மலர் - பூக்களையுடைய,வாவி - பொய்கையை, விரைவோடு சென்று எய்தி- விரைவிற் போயடைந்து, வருவோம்-மீண்டுவருவோம்'எனா- என்று (கடோற்கசனைநோக்கிக்) கூறி, வெம்பு உற்ற பைங்கானின் இடை - தாபம் பொருந்தின பசுமையான அந்தக்காட்டில், மின்உம்-மின்னற்கொடிபோன்ற திரௌபதியும், இளையோர்உம்- (தனது) தம்பிமாரான நகுலசகதேவர் இருவரும், உடன் மேவ - பிரியாது வசிக்க, கம்பிக்கும் நெஞ்சோடு - (வீமனைப்பற்றின கவலையால்)நடுங்குகின்ற மனத்துடனே, அவன் தேரின் மீது-அந்தக் கடோற்கசனது இரதத்தின்மேல், அ கணத்து-அந்த க்ஷணத்திலேயே, ஏறினான்- (தருமபுத்திரன்) ஏறினான்;(எ-று.) தருமன்அளகைக்குச் செல்லக் கடோற்கசனொடு தேரின்மீதேறினனென்பதாம். மேல் 138-ஆங் கவியில் "அன்றந்த விடம்விட்டிமைப்போதி லத்தேரின் மிசையேறியே, மின்றந்த விடையாளுமிளையோருமுறைகானினிடை மேவினான்"என வருதலால், இச்செய்யுளின் மூன்றாமடிக்கு- திரௌபதியும் நகுலசகதேவரும் அக்காட்டினின் தன்னுடன்வர எனப் பொருள் கூறலாகாது. (468) |