132.-தருமன்கடோற்கசனோடுதேரில் அந்தரவழியாயச் செல்லுதல். கரக்கும்பகம்பக்கடாயானைமன்னன்கருத்தோடுசென்று அரக்கன்றடந்தேரிலவனோடுநீடந்தரத்தேகினான் பரக்கும்பெரும்புண்யமும்பாவ முந்தாவில்பகிரண்டமும் புரக்கும்பரஞ்சோதியும்பொங்கு மாமாயையும்போலவே. |
(இ-ள்.)பரக்கும் பெரு புண்யம்உம் பாவம்உம் (போல)- பரவுந்தன்மையுள்ள பெரிய நல்வினையின்வடிவமும் தீவினையின் வடிவமும் போலவும், தா இல் பகிர் அண்டம்உம் புரக்கும் பரம்சோதிஉம் பொங்கும்மா மாயைஉம் போல - அழிதலில்லாத (இந்த அண்டத்தை மாத்திரமேயன்றி மற்றை) வெளியிலுள்ள அண்ட கோளங்களையும்காக்குந் தன்மையுள்ள (எல்லா வொளிகளினும்) மேம்பட்ட ஒளிவடிவமான பரப்பிரமமும் (பலவகையாகப்) பரிணமிக்குந் தன்மையுள்ள பெரியமாயையின் வடிவமும் போலவும்,-கரம்கும்பம் கம்பம் கடாம்யானைமன்னன்- துதிக்கையையும் மத்தகத்தையும் அசையுந்தன்மையையும் மதநீர்ப்பெருக்கத்தையுமுடைய ஆண் யானைக்குஒப்பான தருமராசன், கருத்தோடு சென்று-விருப்பத்துடனே போய், அரக்கன் தட தேரில்- இராக்கதனாகியகடோற்கசனுடைய பெரியதேரின் மேலே, அவனோடு- அக்கடோற்கசனுடனே, நீடு அந்தரத்து-நீண்ட ஆகாயவழியிலே, ஏகினான்- சென்றான்; தருமூர்த்தியும்க்ஷத்திரியதேஜசையுடையவனுமான யுதிட்டிரனுக்கு நல்வினையின்வடிவமும் ஒளிவடிவமான பரமான்மாவும், அரக்கமகனான கருநிறமுடைய கடோற்கசனுக்குத் தீவினையின்வடிவமும் மாயையும் உவமையெனக் காண்க. கும்பம் - குடம் போன்ற வடிவமுடையது; மத்தகத்துகுக்குக் காரணக்குறி: உவமவாகுபெயர். கம்பம்-வடசொல்: எப்பொழுதும் அசைந்துகொண்டிருத்தல் யானையின்இயல்பு; இனி, கம்பம் என்பதற்கு-கட்டுத்தறியிற் கட்டிவைத்தற்குரிய என்றும், கட்டுத்தறியை முறிக்குந் தன்மையுள்ள என்றும், தூண்கள் போன்ற கால்களையுடைய என்றும் பொருள் கொள்ளலாம். பாவம் மாயை என்ற இவற்றைக் கருநிறமுடையன என்றல் நூல்மரபு. உவமையணி. (469) 133.-தருமகடோற்கசரேறினதேர் குபேரன்சோலையை யடைதல். கானெல்லைசெல்லாதுகதிரோனெடுந்தேரெனக்கங்கைசேர் வானெல்லையுவோடியொருநாலுகடிகைக்குள்வயமன்னுதேர் ஊனெல்லையில்லாதுபுகமண்டிமிகமண்டுமுதிரத்துடன் தேனெல்லையில்லாதுகுக்கும்பெருஞ்சூழல்சென்றுற்றதே. |
(இ-ள்.) வயமன்னுதேர்-வலிமைபொருந்தின அத்தேரானது,-கான் எல்லைசெல்லாது - அக்காட்டினிடத்திலே [பூமியில்]செல்லாமல், கதிரோன் நெடு தேர் என-ஆயிரங்கிரணங்களையுடையவனான |