சூரியனதுபெரியஇரதம்போல, கங்கை சேர் வான் எல்லைஉற- தேவகங்காநதி பொருந்தின ஆகாயத்தினிடத்திலே பொருந்த, ஓடி - விரைந்து, ஒரு நாலு கடிகைக்குள்-நான்கு நாழிகைக்குள்ளே, ஊன் எல்லை இல்லாது மண்டி புக மிக மண்டும் உதிரத்துடன்,-(கொல்லப்பட்டவீரர்களது) தசைகள் அளவில்லாது நெருங்கிக் கிடக்க (அவற்றினின்று) மிகுதியாகப் பெருகுகிற இரத்தத்துடனே, (பூக்களினின்று) தேன் எல்லைஇல்லாது உகுக்கும் பெரு சூழல் - மதுவை அளவில்லாற் சொரிகின்ற பெரிய அக்குபேரன் சோலையினிடத்தை, சென்று உற்றது - போய்ச்சேர்ந்தது; (எ-று.) கடிகை - இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம். உதிரம் - வடசொற்றிரிபு. சூழல்-சூழ்ந்துள்ளதெனக் காரணக்குறி. (470) 134.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: தருமன் வீமனைக் கண்டு தளர்வுஆற,கடோற்கசன் தந்தையைக் கண்டு இன்புறல். ஆனைக்குழாநூறுமரியேறெனப்பொங்கியளகேசன்வெஞ் சேனைக்குழாநூறியதனூடுபயில்வாயுசிறுவன்றனைத் தானைப்பெருங்கொற்றமன்கண்டுதானுற்றதளர்வாறினான் ஏனைத்திருத்தாதையைக்கண்டுதேர்நின்றிழிந்தின்புறா. |
(இ-ள்.) ஆனைகுழாம் நூறும் அரி ஏறுஎன - யானைக்கூட்டத்தை யழிக்கின்ற ஆண்சிங்கம்போல, பொங்கி அளகாஈசன் வெம்சேனைகுழாம் நூறி-கோபித்துக் குபேரனது கொடிய சேனைக்கூட்டத்தை அழித்து, அதனூடு பயில்-அச்சோலையினிடத்திலேதங்கியுள்ள, வாயு சிறுவன்தனை- காற்றின் மகனானவீமனை,தானைபெரு கொற்றம் மன் - சேனைகளையுஞ் சிறந்த வெற்றியையுமுடைய யுதிட்டிரராசன், கண்டு-பார்த்து, தான் உற்ற தளர்வு ஆறினான்- தான் அடைந்திருந்த மனக்கவலைத்தளர்ச்சி நீங்கினான்;(கடோற்கசன்), ஏனை- மற்றை, திரு தாதையை - (தனது) சிறந்த தந்தையான வீமனை,கண்டு-பார்த்து, இன்புஉறா-மகிழ்ச்சியடைந்து, தேர்நின்று இழிந்து - தேரினின்றும் இறங்கி,-(எ-று.)-'அடிமன்ன'என மேலைக்கவியில் இயையும். அதனூடு என்றது,கீழ்க்கவியில் 'சூழல்'என்றதை நோக்கின சுட்டு. ஏனையென்னும்இடைச்சொல், வினைமாற்றுப்பொருளது. (471) 135.-தன்னைவாசமலரோடு வணங்கிய வீமனைக்கண்டு தருமன் கூறலுறுதல். மைக்காளமுகிலன்னமகனுந்த னடிமன்னவயவீமனும் கைக்கானினறைவாசமலர்கொண்ட றன்காளைகழனல்கியே முக்காலும்வலம்வந்துமுறையோடுதொழுவானைமுகநோக்கிநின்று எக்காலுநாவந்ததிசையாத விசையோனுமிவைகூறுவான். |
|