பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்303

     (இ-ள்.) மைகாளம் முகில் அன்ன-அஞ்சனத்தையும்
காளமேகத்தையும் (நிறத்தில்) ஒத்த, மகன்உம் - (தனது) குமாரனான
கடோற்கசனும், தன் அடி மன்ன-தனது பாதங்களிற் பொருந்தி வணங்க,
வயம் வீமன்உம் - சயத்தையுடைய வீமசேனனும், கானில் நறை வாசம்
மலர் கைகொண்டு-அச்சோலையிலுள்ளதேனையும்மணத்தையுமுடைய
பூக்களைக்கைகளில் எடுத்துக்கொண்டு வந்து, அறன் காளைகழல் நல்கி-
தருமபுத்திரனது பாதங்களிலேயிட்டு அருச்சித்து, முக் கால்உம் வலம்வந்து-
மூன்று தரம் பிரதக்ஷிணஞ்செய்து, முறையோடு - சாஸ்திரவிதிப்படியே,
தொழுவானை-(சாஷ்டாங்கமாக)நமஸ்கரிப்பவனை,முகம் நோக்கி நின்று -
முகத்தைப் பார்த்துநின்று, நா வந்தது எக் கால்உம் இசையாத
இசையோன்உம்-வாயில் வருகிற வசைச்சொற்களைஎப்பொழுதுங்
கூறுதன்மையில்லாத கீர்த்தியையுடைய யுதிட்டிரனும், இவை கூறுவான் -
(அப்போது) இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;(எ-று.)-அவை
மேற்கவியிற் கூறப்படும்.

     வீமன் தொழுவானை-தொழுவானாகியவீமனையென்க.  எக்காலும் -
பிறர் தீங்குசெய்த காலத்திலு மென்றபடி.  எக்காலும் நாவந்ததிசையாத
இசையோன்-ஒருபொழுதிலுங் கண்டபடி கடுஞ்சொல்லைக்கூறி யறியாத
பொறுமைக் குணத்தின் பெருமையையுடையவ னென்றபடி.        (472)

136.-தன்கட்டளையின்றிப்பெண்வார்த்தையால்
தனித்துவந்துபொருததுபற்றித் தருமன் வீமனைச்
சினத்தல்.

என்னேவலாலன்றியிமையோரு மெய்தாதவிக்காவினீ
மின்னேவலால்வந்துவிரகாக வினைசெய்தவிதுமேன்மையோ
உன்னேவல்புரிவாருமுளரும்பி மாரென்றுருத்தானரோ
தன்னேவலாலிந்தவுலகேழும் வலம்வந்ததனியாழியான்.

     (இ-ள்.)'இமையோர்உம்எய்தாத இ காவில்-தேவர்களும்
நுழையக்கூடாத [மிக்ககாவலையுடைய]இந்தச் சோலையிலே,நீ-,என்
ஏவலால் அன்றி-எனது அனுமதியினாலல்லாமல், மின் ஏவலால்-மின்னற்
கொடிபோன்ற திரௌபதியினது கட்டளையால்,விரகுஆக வந்து-
கபடமாகவந்து, வினைசெய்த- (போர்முதலிய) தொழில்களைச்செய்த,  இது
- இச்செய்கை, மேன்மைஓ - சிறப்பாமோ?  உன் ஏவல் புரிவார்உம்
உம்பிமார் உளர்-(தங்கள் தமையனான)உனது கட்டளையைச்
செய்பவர்களும் உன் தம்பியர் இருக்கின்றனரன்றோ?'என்று -
என்றுசொல்லி, உருத்தான்-கோபித்தான்: (யாரென்னில்), தன் ஏவலால்
இந்த உலகு ஏழ்உம் வலம் வந்த தனி ஆழியான்-தனது கட்டளையால்
இந்த ஏழு தீவுகளையுடையஉலக முழுவதிலுஞ் சூழ்ந்துவருந் தன்மையதான
ஒப்பற்ற ஆஜ்ஞா சக்கரத்தையுடைய தருமன்;(எ-று.)

     உனதுதம்பியராகிய அருச்சுனனாதியர்உன்ஏவற்படி நடக்க, எனது
தம்பியாகிய நீமாத்திரம் எனது ஏவலின்றி யொழுகுவது