பக்கம் எண் :

304பாரதம்ஆரணிய பருவம்

தகுதியோவென்றவாறு.  மின்ஏவலால் வந்து விரகாக என்றது,
தையல்சொற்கேட்ட இழிதகைமையை விளக்கும் 'மின்'என்றது அவளுடைய
தேக காந்தியிலே ஈடுபட்டு வீமன் அங்ஙனஞ்செய்தானென்பதை
யுணர்த்துதற்கு.  விரகு-தந்திரம்.  ஆணையைச்சக்கரமென்றல், மரபு.
இவ்வுலகம் ஏழுதீவுகளையுடைமைபற்றி 'உலகேழும்'என்றார்: ஆகவே,
இங்கு உலகுஎன்பது தீவுஎன்று அதன் ஏகதேசத்தை யுணர்த்திற்றென்க:
"மாயோன்மேயகாடுறை யுலகமும்"என்ற இடத்துப்போல.  அரோ-ஈற்றசை.
                                                        (473)

137.-தருமன்முனிவாறித் தாம் வசித்திருந்த காட்டை
மீண்டடைதல்.

என்றிந்தவுரைகூறிமுனிவாறி யிறையோனுமிகலோனுடன்
சென்றந்தண்மலர்வாவிபடிவுற்று வாசத்திருத்தார்புனைந்து
அன்றந்தவிடம்விட்டிமைப்போதி லத்தேரின்மிசையேறியே
மின்றந்தவிடையாளுமிளையோருமுறைகானினிடைமேவினான்.

     (இ-ள்.) என்றுஇந்த உரை கூறி-என்று இந்த வார்த்தைகளைச்
சொல்லி, முனிவு ஆறி - (உடனே) கோபந்தணிந்து, இறையோன்உம் -
(யாவர்க்குந்) தலைவனானதருமனும், இகலோனுடன் சென்று -
வலிமையையுடைய வீமனுடனேபோய், அம் தண் மலர் வாவி படிவுற்று -
அழகிய குளிர்ந்த பூக்களையுடையஅப்பொய்கையிலே நீராடி, வாசம் திரு
தார் புனைந்து- வாசனையையுடையஅழகிய (அப்பொய்கையிலுள்ள)
மலரைச் சூடி, அன்று - அப்பொழுதே, அந்த இடம் விட்டு-அவ்விடத்தை
நீங்கி, இமைப்போதில் - ஒரு நொடிப்பொழுதிலே, அ தேரின்மிசை ஏறி -
அந்தக் கடோற்கசனது இரதத்தின்மே லேறிக்கொண்டு, மின் தந்த
இடையாள்உம் இளையோர்உம்உறை கானினிடை மேவினான்-
மின்னலையொத்தஇடையையுடைய திரௌபதியும் (தனது) இளைய
தம்பிமாரான நகுலசகதேவரும் வசிக்கின்ற அக்காட்டில் வந்திட்டான்;

     இகலோன் -கடோற்கச னென்பாரு முளர்.  மின் தந்த இடை, தந்த-
உவமவுருபு.  தார் என்னும் மாலையின்பெயர்,அதற்குக்கருவியான பூவுக்கு
இங்கே காரியவாகுபெயர்.                                 (474)

138.-தருமன்உரோமசனைவணங்கி, திரௌபதிக்கு
மலரளித்து,கடோற்கசனுக்கு விடைதந்தனுப்புதல்.

மேவிப்பெருந்தெய்வமுனிபாதமலர்சென்னிமிசைவைத்துமென்
காவிக்கயற்கண்ணிணைச்சேயி தழ்ப்பாவைகளிகூரவே
வாவிச்செழுந்தாமமலர்நல்கி யொல்காதுவலிகூருநல்
ஆவிக்கின்னமுதானநிருதற்கு விடையன்றளித்தானரோ.

     (இ-ள்.)(யுதிட்டிரன்), மேவி - வந்துசேர்ந்து, பெரு தெய்வம் முனி
பாதம் மலர் சென்னிமிசை வைத்து - சிறப்புள்ள தேவ விருடியான
உரோமசமகாமுனிவனது திருவடித்தாமரைப் பூவைத்(தனது) தலைமேற்
கொண்டுவணங்கி, மெல் காவி கயல் இணைகண் சேய் இதழ் பாவை
களிகூர - மென்மையான நீலோற்பல