பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்305

மலரையும் கயல்மீனையும்போன்ற ஒன்றோடொன்றொத்தகண்களையும்
சிவந்தஅதரத்தையுமுடைய சித்திரப்பதுமைபோலழகிய திரௌபதி களிப்பு
மிகும்படி, வாவி செழு தாமம் மலர் நல்கி-அப்பொய்கையிலிருந்து
கொணர்ந்த அழகிய மாலையாகத்தொடுத்தற்குரிய பூக்களை(அவளுக்கு)க்
கொடுத்து, ஒல்காது வலி கூரும் - தளர்ச்சியில்லாமல் வலிமைமிகுந்த, நல்
ஆவிக்கு இன் அமுது ஆன - சிறந்த (தனது) உயிருக்கு இனிமையான
அமிருதத்தையொத்து உதவின, நிருதற்கு - அரக்கனாகியகடோற்கசனுக்கு,
அன்று - அப்பொழுது, விடை அளித்தான் - அனுமதி கொடுத்தனுப்பினான்;
(எ-று.)-அரோ- ஈற்றசை.

     இங்கே,'வாவிச்செழுந்தாமமலர்நல்கி'என்றதனால்,வீமன்
கொண்டுவந்தது நீர்ப்பூவேயென்பது தெளிவாம்.  கீழ்க்கவியிலிருந்து
தொடர்ச்சியாய், பிரதானனானதருமன் உரோமசமுனிவரை
வணங்கியதையும், திரௌபதிக்குப் பூவளித்ததையும், கடோற்கசனுக்கு
விடையளித்ததையும் கூறியதிலேயே வீமன் உரோமசமுனிவரை வணங்கியது
முதலியவையும் அடக்கப்படவேண்டும், கீழ்க்கவியில் 'மேவினான்'என
முடித்து, இக்கவியில் 'மேவி'என எடுத்துத் தொடர்ச்சிப்படுத்துக்
கூறினமையின்.  இக்கவியில் பாதமலர் சென்னிமிசை வைத்தல், மலர்
நல்குதல், விடையளித்தல் என்னும் வினைக்கெல்லாம்கீழ்க்கவியில்
'இறையோன்'என்றதனாற்குறித்த யுதிட்டிரனே எழுவாயாதல் ஏற்கும்.
தருமபுத்திரனிடத்து வீமசேனன்தான் தேடிய மலர்களைக்கொடுத்ததனால்,
திரௌபதியினிடம் தருமனே அம்மலர்களைக்கொடுத்தா னென்க.  இனி,
இக்கவியில் வீமனெனத் தோன்றாஎழுவாய்வருவித்தல்வேண்டு
மென்பாருமுளர்.  நல்லாவி யென்றது, எவர்க்கும் உயிரினுமினியது
வேறின்றாதலின். தருமபுத்திரனது உயிர்த்துணைவனானவீமனது
க்ஷேமத்தை அறிதற்குக் கடோற்கசனே ஆபத்பந்துவாய் உதவினமையின்,
'நல்லாவிக்கின்னமுதானநிருதன'என்றது. சேய்தழற் பாவை என்றும்
பாடம்.                                             (475)

வேறு.

139.-பாண்டவர்அங்குத்தானே திரௌபதியுடன்
தங்கியிருத்தல்.

மின்புரை மருங்குன் மின்னும் வேந்தரு மந்தக் கானில்
அன்புடைமுனிவன் கூற வவன்மலர்ப் பாதம் போற்றித்
துன்பமுந்துனியு மாறி நாடொறுந் தோகை பாகன்
தன்பெருங் கதையுங் கேட்டுத் தங்கின ரென்ப மாதோ.

     (இ-ள்.) மின்புரை மருங்குல் மின்உம்-மின்னலையொத்த
இடையையுடைய திரௌபதியும், வேந்தர்உம் - (அருச்சுனனொழிந்த)
பாண்டவர்களும், அன்பு உடை முனிவன் கூற - (யாவரிடத்தும்)
அன்பையுடைய உரோமசமுனிவன் ( பல தரும நெறிகளை)உபதேசிக்க (க்
கேட்டு), அவன் மலர் பாதம் போற்றி-அம்முனிவனுடைய