பக்கம் எண் :

306பாரதம்ஆரணிய பருவம்

தாமரைமலர்போன்றதிருவடிகளைவணங்கி, துன்பம்உம் துனிஉம் மாறி-
துன்பங்களும் கவலையும்ஒழிந்து, நாள்தொறுஉம் - தினந்தோறும்,
தோகைபாகன்தன் பெரு கதைஉம் கேட்டு-தோகையுள்ள மயில்போலுஞ்
சாயலையுடையஉமாதேவியைஇடப்பாகத்திற் கொண்ட சிவபிரானது  சிறந்த
சரித்திரத்தையுங் கேட்டுக்கொண்டு, அந்த கானில்-அக்காட்டிலே, தங்கினர்-
தங்கியிருந்தார்கள்;(எ-று.)-என்ப- அசை.  மாது, ஓ - ஈற்றசை.

     தோகைபாகன்தன் பெருங்கதை-திரிபுரசங்காரம் போல்வன.  தோகை
- மயிலிறகு;இங்கே இருமடியாகுபெயர்.  தோகைபாகன் பெருங்கதை
கேட்டது-பாசுபதம்பெற அருச்சுனன் அப்பிரானைக்குறித்துச்
சென்றிருத்தலினாலாகும். உம்மையால், பிற புண்ணிய சரித்திரங்களையுங்
கொள்ளலாம்.  முன்னே 'மின்புரைமருங்குல்'என வந்ததனால்,பின்பு
'மின்'என்றது - பெண்ணென்னுமாத்திரையாய் நின்றது.

     இக்கவி -கீழ் எண்பத்திரண்டாங் கவிபோன்ற அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்.                               (476)

புட்பயாத்திரைச்சருக்கம் முற்றிற்று.

நான்காவது

சடாசுரன் வதைச்சருக்கம்

     சடாசரன்என்பவனது கொலையைக்கூறும் பாகமென்று பொருள்.
சடாசுரன் என்பதை ஜடா அசுரன் என்று பிரித்து, சடை முடியையுடைய
அசுரனென்று பொருள் கொள்க. அசுரன் என்பது - அ சுரன் எனப் பிரிந்து
தேவனல்லாதவ னென்றும், பாற்கடல் கடைந்த காலத்து அதனினின்று
உண்டான மதுவைப் பானஞ் செய்யாதவ னென்றும், அசு ரன் எனப் பிரிந்து
(பகைவர்) உயிரைக் கவர்பவ னென்றும் பொருள்தரும்.  சடாசுரன் வதை -
தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபு,செயப்படுபொருளில் வந்தது.  இவன்
திரௌபதியை யெடுத்துக் கொண்டுபோனதுபற்றி, இவனைவீமன்
கொன்றான். இவனைமேல் அரக்கனெனக் கூறியிருப்பினும் இங்கே
அசுரனென்றது, இரண்டு சாதியாரும் கொடுந்தொழில் செய்யும்
இனத்தவராதலின் என்க.

1.-கடவுள்வாழ்த்து.

அழுதும்வாண்முறுவ லரும்பியுங் களித்து மாடியும்பாடியு
                                          மகிழ்ந்தும்,
தொழுதுமா தரித்தும் விழுந்துமே லெழுந்துந் துதித்திடத் தன்
                                        பதந்தருவான்,
முழுதுமா யெங்கு முச்சுட ராகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய்,
எழுதொணாமறைக்கு மெட்டொணாவடிவத்தெம்பிரானும்பர்நா
                                             யகனே.