உபய மைந்தர்உம் -மாத்திரியினது இரட்டைப் பிள்ளைகளும்,[நகுல சகதேவர் இருவரும்],வார் சிலைகரத்து ஏந்தி-நீண்டவில்லைக்கையிலே யெடுத்துக்கொண்டு, உரும் என உருத்து-இடிபோலக் கோபத்தோடு கர்ச்சித்து, எழுந்து - புறப்பட்டு, ஓடி-விரைந்து சென்று, இபம் நடுங்கிட முன் வளைத்திடும்கொற்றத்து யாளி போல்-யானை(மிக்க அச்சமடைந்து) நடுங்கும்படி (அதனை)முன்னேவந்து எதிர்த்துத் தடுக்கிற வெற்றியையுடைய யாளியென்னும் விலங்குபோல, இருபுறம் சூழ்ந்து-(அவனது) இரண்டு பக்கத்திலும் நெருங்கி, நபம் முகில் என்ன மின்னொடுஉம்பெயர்வான் தனக்கு எதிர் நின்று-கார்காலத்து மேகம் மின்னலுடனே யெழுதல்போலத் திரௌபதியுடனே மேலெழுந்து செல்லுகிற அவ்வரக்கனுக்கு எதிரில்நின்று, இவை நவில்வார்-இவ்வார்த்தையைக் கூறுபவரானார்கள்; (எ - று.)- அவற்றை மேற்கவியிற் காண்க. மாத்திரி-மத்திரதேசத்தரசன் மகள். இவள், பாண்டுவின் இரண்டாம் மனைவி;சல்லியனுடன் பிறந்தவள். இபம்-அரக்கனுக்கும். யாளிகள்- நகுலசகதேவர்க்கும் உவமை. நபம்-நபா:என்னும் வடசொல்லின் திரிபு: இது, ஆவணிமாசத்தின்பெயர்:இலக்கணையாய்க்கார்காலத்தைக் குறித்தது. நபம்முகில்-ஆகாயத்திற் செல்லும் மேகமுமாம். (484) 9.-நகுலசகதேவர்யுத்தசன்னத்தராகி அவ்வரக்கனைப்பழித்தல். மறையவர்வடிவங்கொண்டுவந்தருளில் வஞ்சநீவஞ்சனையாகப், பிறர்பெருந்தாரம்வெளிவியந்தரத்திற் பெயர்வதுபெருமையோபித்தா, நெறியலாநெறிசெய்துன்குலத்தொருபோர் நிருதன்முன்பட்டதுநினையாய், முறையலாதியன்றுன்னுயிரினைமுடிக்குமுரணுடைத்தறுகண்மா மூர்க்கா. |
(இ-ள்.) அருள்இல் வஞ்ச-கருணையில்லாதவஞ்சனையுடையவனே! நீ-, மறையவர் வடிவம் கொண்டு வந்து-வேதம்வல்ல அந்தணரின் உருவத்தை யெடுத்துவந்து, வஞ்சனைஆக-, பிறர் பெரு தாரம் வௌவி- அயலாரது கற்பிற்சிறந்த மனைவியைக்கவர்ந்தெடுத்து, அந்தரத்தில் பெயர்வது-ஆகாயத்தில் எழுந்து செல்வது, பெருமைஓ - ஒரு பெருமையாகுமோ?பித்தா-அறிவு மயக்கமுடையவனே! முறை அலாது இயன்று - நீதியல்லாத காரியத்தைப் பொருந்தி, உன் உயிரினைமுடிக்கும்- உனது உயிரை ஒழித்துக்கொள்ளவிருக்கிற, முரண் உடை- மாறுபாட்டையுடைய, தறுகண் - அஞ்சாமையையுமுடைய, மா மூர்க்கா - பெரிய மூர்க்க குணமுடையவனே! முன் - முன்காலத்தில், உன் குலத்து- உனது குலத்திலே, போர் ஒரு நிருதன் - போர்செய்யவல்ல ஓர் அரக்கன் [இராவணன்],நெறி அலா நெறி செய்து - முறைமையல்லாத காரியத்தைப் பண்ணி [இராமனுக்குமனைவியானசீதையைக் கவர்ந்துசென்று], பட்டது - அடைந்த அழிவை, நினையாய்- எண்ணுவாயாக;(எ-று.) |