பக்கம் எண் :

32பாரதம்ஆரணிய பருவம்

 சகலகலைகளுக்குமிவன்றானேயிங்ஙன்றவம்
                புரியநினைப்பதே சார்ந்த பாவம்.

     (இ-ள்.) பகிரதன்ஏ முதல் ஆன-பகீரதன் முதலாகிய, எண் இல் கோடி
பார்த்திவர்உம் - அனந்தகோடிக் கணக்காகிய அரசர்களும், தவம் புரிந்தார்
- தவஞ்செய்தார்கள்; பை பொன் மேனி இகல் அவுணர் முதல் ஆன-
பசும்பொன்னிறமான உடம்பையுடைய வலிய இரணியாசுரன்முதலாகிய,
ககனவாணர் எத்தனை பேர்-ஆகாயத்திற் சஞ்சரிக்குந்
தன்மையையுடையவர்கள் எத்தனையோபேர், தவம் புரிந்தார்-
தவஞ்செய்தார்கள்; இமையோர் ஏத்தும்மகபதி தன் மதலை-தேவர்களால்
துதிக்கப்பெற்ற தேவேந்திரனது குமாரன், எழுத ஒணாத வனப்பினுக்கு வரி
சிலை கை மத(ன்) வேள் ஒவ்வான்-(சித்திரத்திலும்) எழுதமுடியாத
அழகுக்குக் கட்டமைந்த கருப்பு வில்லைப்பிடித்த கையையுடைய
மன்மதனும் (தன்னோடு) ஒப்பாகப் பெறாதவனாகி, சகல கலைகளுக்குஉம்
இவன் தான்ஏ-எல்லாக் கல்விகளுக்கும் (வேறுஉவமை பெறாமல்) தன்னோடு
தானே ஒப்பவன்: இவன்-இவ்வருச்சுனன், இங்ஙன் தவம் புரிய
நினைப்பதுஏ-இவ்வாறு (கோரமான) தவத்தைச் செய்ய நினைப்பதே?சார்ந்த
பாவம்-(இவன் இவ்வாறு வருந்துதல் முற்பிறப்பிற் செய்யப்பட்டுப் பிற்
பிறப்பில்) தொடர்ந்துவந்து அடைந்த தீவினையின் பலன்போலும்;

     பகீரதன்-சூரியகுலத்துப் பேர்பெற்ற அரசன்; இவன், கபில
மகாமுனிவரது கோபத்தீக்கு இரையாய்ச் சாம்பலான தனது மூதாதையராகிய
சகரபுத்திரரறுபதினாயிரவரையும் நற்கதி பெறச்செய்யும்பொருட்டுப்
பலவாயிரம் வருஷகாலம் பெருந்தவஞ்செய்து தேவலோகத்துஉள்ள
கங்காநதியைப் பூமிக்குப் கொணர்ந்து அங்கிருந்து பாதாளத்துக்கு
அழைத்துக்கொண்டுபோய் அதன் நீரினால் அவர்கள் சாம்பலை
நனைத்தான்.  பார்த்திவர்-பூமியையாளும் அரசர்: பிருதிவி-பூமி:
தத்திதாந்தநாமம்.  உம்மை-உயர்வுசிறப்பு.  இரணியன், முதலில்
திரிமூர்த்திகளைக்குறித்து அளவிறந்த காலம் அருந்தவம் புரிந்து, தேவர்
மனிதர் விலங்கு முதலிய சீவன்களாலும் ஐம்பெரும் பூதங்களாலும்
ஆயுதங்களாலும் மற்றும் எவற்றாலுந் தனக்கு மரணமில்லாதபடி பல
வரங்களைப் பெற்றான்.  அவுணர்என்று பன்மையாற் கூறியது, சிறப்புப்பற்றி,
உடம்பிற்சிறந்த உறுப்பாகிய கண்ணைப் பொன்னிறமாகவுடைய அவனது
தமையனான இரணியாக்கனையும் உளப்படுத்தியதாகவுங்கொள்ளலாம்: இனி,
பொன்னிறமான உடம்பையுடைய காலகேயரென்னும் அசுரரென்றும்
உரைக்கலாம்.  மேல் நிவாதகவசர் காலகேயர்வதைச்சருக்கத்தில்
"பொன்காலுமெய்யர்"என வருவதுங் காண்க.  அசுரர்
தேவவருக்கத்தைச்சேர்ந்தவராதலால், 'ககனவாணர்'என்றது.
முதலிரண்டடிகளாலும், 'இங்ஙன்'
என்றதனாலும் அருச்சுனன் அவர்களினும்
சிறப்புறத் தவஞ்செய்தானென்பது, போதரும் மதன்-மதத்தையுண்டாக்குபவன்:
மன்மதன் கந்தவேளை விலக்குதற்கு 'மதவேள்'என்றார்: