பக்கம் எண் :

சடாசுரன்வதைச்சருக்கம்323

றந்த மலைகளைச்சேர்ந்த வழிகளை,சிங்கம் என - சிங்கங்கள்போல,
சென்றார்- கடந்துபோனார்கள்;(எ-று.)

     குருநாட்டின்எல்லைகங்கைவரையி லென்க.  நாட்டை யிழந்து
காட்டில் வசிக்கும் பாண்டவரைக் கங்கைவளநாடரென்றது, அரசாண்ட
பாண்டுமகாராசனது குமாரரும் துரியோதனாதியரினும்பிராயத்தில்
மூத்தவருமாகிய இவர்களே முறைப்படி அந்நாட்டிற்கு உரியவராதலின்.
இப்பொழுது இவர்களுக்கு நாட்டரசாட்சி இல்லையாயினும்,முன்னும்
பின்னும் நாட்டையாளுதல் பற்றி நாடரெனக்கூறிய தென்க.  தங்கினார்கள்,
கள்-விகுதிமேல் விகுதி;அசையெனினுமாம்.                   (500)

25.-அஷ்டகோணமகரிஷியின்வனத்தையடைந்து
அம்முனிவனைத்தொழ,அவனாற்பாண்டவர்
உபசரிக்கப்படுதல்.

ஏணில்வரைமார்பரிமை யோர்புகழுமெட்டுக்
கோணுடையமாமுனிவ னங்குறுகியன்னான்
மாணுடைமலர்ப்பதம் வணங்கினர்துதித்தார்
தாணுவனையானுமவர்தம்மையெதிர்கொண்டான்.

     (இ-ள்.) ஏண்இல் வரை மார்பர்-வலிமைக்கு இருப்பிடமான
மலைபோலும்மார்பையுடைய பாண்டவர்கள்,-இமையோர்புகழும் எட்டு
கோண் உடைய மா முனி வனம் குறுகி-தேவர்கள் புகழுந் தன்மையாகிய
(உடம்பில்) எட்டுக்கோணலையுடைய அஷ்டாவக்கிர மகாமுனிவ
ரெழுந்தருளியிருக்குங் காட்டை அடைந்து, அன்னான்மாண் உடை மலர்
பதம் வணங்கினர் - அம்முனிவரது மகிமையையுடைய தாமரைமலர்போலுந்
திருவடிகளைநமஸ்கரித்து, துதித்தார் - தோத்திரஞ் செய்தார்கள்;தாணு
அனையான்உம்-(பெருந்தவமுடைமையிலும் பேராற்றலிலும்)
சிவபிரானையொத்தஅம்முனிவரும், அவர் தம்மை எதிர்கொண்டான்-
அப்பாண்டவர்களைஎதிர்கொண்டு உபசரித்தருளினார்;(எ-று.)

     ஏணில்என்பதில், இல்-சாரியையெனக்கொண்டு, வலிமையையுடைய
வரை மார்பு என்றுமாம்.  "வரையகன்மார்பிடை வரையு மூன்றுள"எனச்
சிந்தாமணியிலும், "ஆரந்தாழ்ந்த வம்பகட்டு மார்பிற், செம்பொறி  வாங்கிய
மொய்ம்பு"எனத் திருமுருகாற்றுப்  படையிலும் கூறியுள்ளவற்றிற்கேற்ப,
வரை மார்பு - (உத்தமவிலக்கணமாகிய மூன்று) ரேகைகளையுடையமார்பு
என்றலுமாம்.  கோண்-கோணுதல்: முதனிலைத்தொழிற்பெயர்;
கோணமென்னும் வடசொல்லின் விகாரமென்றுங் கொள்ளலாம்.  ஒவ்வொரு
பிரம கற்பத்துக்கு ஒவ்வொரு உறுப்புக்கோணல் நிமிருமாறு நீண்ட
ஆயுளையுடையஅந்த அஷ்டகோணமகாமுனிவர், திருமாலின் அமிச
மெனப்படுவர்.  இப்படிப்பட்ட பெருந்தகைமையுடைய முனிவரும்
இவர்களைஎதிர்கொண்டு உபசரித்தது, தமது இயற்கையாகவுள்ள
நல்லருளாலென்க.  மாண் - மாட்சி; பண்படி.  தாணு -