பக்கம் எண் :

325

ஐந்தாவது

மணிமான்வதைச்சருக்கம்

    மணிமான்என்பவனது வதத்தை யுணர்த்தும் பாக மென்று பொருள்.
மணிமான் - ஒருவித்தியாதரன்; குபேரனது சேனைத்தலைவர்களுள்
ஒருவன்.  மணிமாந் என்னும் வடசொல்லுக்கு-இரத்தினங்களையுடையவ
னென்று பொருள்; மாந் - வடமொழிப் பெயர்விகுதி.

    இந்தச்சருக்கத்திற் கடவுள்வாழ்த்துச்செய்யுள் காணப்படவில்லை;
மாநசிகமாத்திரமாகக் கடவுள் வணக்கம்நிகழ்ந்ததென்றாவது,
கடவுள்வாழ்த்தாக நூலாசிரியராற் பாடப்பட்டதொரு செய்யுள் பிற்காலத்தில்
ஏடெழுதுவோரால் எழுதாதுவிடப்பட்டு எஞ்சிய தென்றாவதுகாரணங்
காண்க.  இங்ஙனமே மற்றையிடங்களிலும் கொள்க.

1.-ஒருநாள்ருஷிபத்தினிமாருடன் திரௌபதி
நீர்ப்பெருக்கிற்படிதல்.

அங்கிவர மர்ந்துறையு நாளிலணி யோடும்
பொங்கியொரு மாநதிபு துப்புனல்வ ரப்போய்
மங்கைமுனி மங்கையர்க டங்களொடு வாசப்
பங்கயநெ டுந்துறைந றும்புனல்ப டிந்தாள்.

     (இ-ள்.) அங்கு- அவ்விடத்தில் [அஷ்டகோணமுனிவரதுவனத்திலே],
இவர் - இந்தப்பாண்டவர்கள், அமர்ந்து - விரும்பி, உறையும் நாளில் -
வசிக்குங்காலத்தில்,-(ஒருநாள்),-ஒருமா நதி-ஒருபெரியநதியிலே, புதுபுனல்
- புதியநீர்வெள்ளம், அணியோடுஉம் பொங்கிவர - அழகுடனே பெருகி
வருகையில், மங்கை - பெண்களிற்சிறந்த திரௌபதி, முனிமங்கையர்கள்
தங்களொடு-ருஷிபத்தினிகள் பலருடனே, போய்-சென்று, வாசம் பங்கயம்
நெடு துறை புனல் - வாசனையையுடையதாமரைமலரைக்கொண்ட பெரிய
நீர்த்துறையையுடைய சிறந்த அந்நீரிலே, படிந்தாள் - நீராடினாள்;

    மங்கையென்றசொல், இங்குப் பருவங்குறியாமற் பெண்என்னு
மாத்திரையாய் நின்றது; அப்பருவத்துக்கு வயதெல்லை,பன்னிரண்டுமுதற்
பதின்மூன்றளவும்.  துறை - நீரிலிறங்குமிடம்.

     இதுமுதற்பதின்மூன்று கவிகள் - சடாசுரன்வதைச்சருக்கத்தின் 21 -
ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள்.                           (503)

2.-அப்புனலில்அடித்துக்கொண்டுவந்த பதுமமலரைத்
திரௌபதி எடுத்தல்.

அப்புனலிலார்தரு மணங்கமழவந்தண்
மெய்ப்பதுமநாண்மலர் மிதந்துவரமீதே
மைப்பதுமவாள்விழி மடந்தையதுகாணாக்
கைப்பதுமநாண்மல ருறக்கடிதெடுத்தாள்.