பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்327

இன்புறவிமைப்பொழுதி னின்றுமிதளிப்பேன்
துன்புறறழற்கடவு டந்ததொருதோகாய்.

     (இ-ள்.)'தழல்கடவுள் தந்தது ஒரு தோகாய் - அக்கினிபகவான்
பெற்ற ஒரு மயில்போன்றவளே!  முன்புஉம்-முன்னமும், மலர் உன் குழல்
தனக்கு - பூக்களைச்சூடுந்தன்மையுள்ளஉனது கூந்தலுக்கு, இ மலர் - இது
போன்ற பூவை, முன்பால் - வலிமையினால்,அன்புடன் - அன்புடனே,
இயக்கர்பதி நின்றும் - யக்ஷர்களது நகரமான அளகாபுரியினின்றும், அருள்
செய்தேன் - கருணைசெய்துகொணர்ந்துகொடுத்தேன்;இன்றுஉம்-
இப்பொழுதும், இன்பு உற-(நீ) இன்பமடையும்படி, இமை பொழுதின் -
நொடிப்பொழுதினுள்ளே, இது - இவ்வகைத்தாமரைமலரையும், அளிப்பேன்
- கொணர்ந்து கொடுப்பேன்;துன்பு உறல் - துன்பமடையாதே;'

     முன்பும்,இன்றும் என்றவற்றிலுள்ள உம்மைகள் - முறையே எதிரதும்
இறந்ததுந் தழுவிய எச்சப்பொருளன.  துன்புறல்-எதிர்மறையொருமையேவல்;
வியங்கோளென்றுங் கொள்ளலாம்.தோகாயென்பது - இங்குப் பொருளால்
உயர்திணையாயினும், சொல்லால்அஃறிணையாதலின்,தந்தது என்ற
அஃறிணையொருமைச்சொல்லால்விசேடிக்கப்பட்டது.            (506)

5.இந்தமலரிந்திர புரத்தெனினுமின்றுன்
அந்தமில்கருங்குழ றனக்கருள்கிலேனேல்
முந்தரவுயர்த்தவன் முதற்பகைமுடிக்கும்
மைந்துடையதன்றெனது வாகுகிரியென்றான்.

     (இ-ள்.)'இந்தமலர் - இவ்வகைப்பூவை, இந்திர புரத்து எனின்உம்-
தேவேந்திரனது அமராவதிநகரத்தில் உள்ளதாயினும், இன்று - இப்பொழுதே
(சென்று), உன் அந்தம் இல் கரு குழல் தனக்கு - உனது அழிதலில்லாத
கரிய கூந்தலுக்கு, அருள்கிலேன் ஏல்-(யான்)கொடுக்கமாட்டாமற்
போவேனாயின்,எனது வாகு கிரி-எனது தோள்களாகிய
மலைகள்,முந்து அரவு உயர்த்தவன் முதல் பகை முடிக்கும் மைந்து
உடையது அன்று - சிறந்த பாம்புக் கொடியை உயரஎடுத்தவனான
துரியோதனன் முதலான பகைவர்களைஅழிக்கும் வலிமையுடையனவல்ல,'
என்றான்- என்று சபதஞ் செய்தான், (வீமசேனன்);   (எ-று.)

     அருள்கிலேன்,கில்-ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வாகுகிரி-
சாதியொருமை.  அன்று-எதிர்மறை ஒருமைக் குறிப்புமுற்று.    (507)

6.-வீமன்உடன்பிந்தவர்க்குத்தெரியாது மலர்கொணரப்
புறப்படுதல்.

என்றினைவாசகமுரைத்திகலினென்றும்
வென்றிதருதண்டுசிலைகொண்டுவிறலோடும்
தன்றுணைவரொன்றுமுணராதபடிதானே
சென்றனனிடிம்பனையடுந்திறலின்மிக்கான்.