10. | சூலுடையமந்தியயர் வுற்றதுயர்தீரக் காலுடைநெடுங்கடுவன் வார்கழைநறைத்தேன் மாலைவரிவண்டிரியமோதிவழையிலையிற் கோலியதன்வாயிடை கொடுத்திடுவதொருசார். |
(இ - ள்.)ஒருசார் - ஒருபக்கத்தில், சூல் உடைய மந்தி அயர்வு உற்ற துயர் தீர-கருப்பத்தையுடைய பெண்குரங்கு வலிமைத் தளர்ச்சியாலடைந்த துன்பம் நீங்கும்படி, கால்உடை நெடு கடுவன்-(நீண்ட வலிய) கால்களையுடையபெரிய ஆண்குரங்கு, வார் கழை நறை தேன்-நீண்ட மூங்கிலிற் கட்டப்பட்ட நறுமணமுள்ள தேனை,மாலைவரி வண்டு இரிய மோதி-(அத்தேன்கூண்டில்மொய்த்துள்ள) வரிசை வரிசையான பாடுந்தன்மையுள்ள வண்டுகள் விட்டொழியும்படி அடித்தோட்டி, வழை இலையில்கோலி - சுரபுன்னைமரத்தினிலையிலே(அம்மதுவைப்) பெய்துஎடுத்து, அதன் வாயிடை-அப்பெண் குரங்கின்வாயிலே, கொடுத்திடுவது-(பருகும்படி) கொடுப்பதாகும்; மந்தி,கடுவன்-இவை முறையே குரங்கின் பெண்மை ஆண்மை உணர்த்தும்பெயர்களாதலை"குரங்குமுசுவு மூகமு மந்தி," "குரங்கினேற்றினைக்கடுவனென்றலும்"என்ற தொல்காப்பியச் சூத்திரங்களா லறிக. வரி - பாட்டு;உடம்பின்கோடுகளுமாம். கடுவன - கடுமையையுடையதெனக் காரணப்பெயர்;அன் - இங்கு அஃறிணையாண்பால்குறிக்கும் பெயர் விகுதி: 'கோட்டான்'என்பதில் 'ஆன்'விகுதி போல. (512) 11. | கடக்கலுழிபாய்மத கதக்களிறுமந்தண் மடப்பிடிகளுந்தமின் மணந்திடுவதொருசார் அடர்த்தறுகுமாளியு மதிர்ந்துமுழைதோறும் புடைத்தெதிர்மலைந்துமிகுபோர்புரிவதொருசார். |
(இ - ள்.) ஒருசார்-ஒருபக்கத்தில், கடம் கலுழி பாய் மதம் கதம் களிறுஉம்-கன்னங்களினின்று கலங்கலாகப் பெருகுகிற மதநீரையும் கோபத்தையுமுடைய ஆண்யானைகளும்,அம் தண் மட பிடிகள் உம் - அழகியகுளிர்ச்சியையும் [பொறுமையையும்]இளமையையுமுடைய பெண்யானைகளும்,தமில் மணந்திடுவது - தங்களுள் [ஒன்றோடொன்று] விவாகஞ்செய்து கொள்வது;ஒருசார்-ஒருபக்கத்தில், அறுகுஉம் - புலியும், ஆளிஉம் - யாளி யென்னும்விலங்கும், முழைதோறுஉம் - குகைகளிலெல்லாம், அடர்த்து-நெருங்கி, அதிர்ந்து - ஆரவாரித்து, புடைத்து - அடித்து, எதிர் மலைந்து- எதிர்த்து மோதி, மிகு போர்புரிவது- மிகுந்தபோரைச் செய்திடுவது; கலுழ்தல் -கலங்குதல்;இ-பெயர்விகுதி. "வேழக்குரித்தே விதந்துகளிறென்றல்," "பிடியெனபெண்பெயர்யானைமேற்றே" என்ற தொல்காப்பியச்சூத்திரங்களால், களிறும் பிடியும் யானையின்ஆண் பெண் பெயர்களாம். (513) |