பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்335

மானிடனோவலிகொண்டு பொரவருவானென்று  அதிசயித்தான்.
உயிர்நண்பன்-பிராணசிநேகிதன்.                        (521)

20.தும்பிக்குலமிரதத்தொகை துரகத்திரள்காலாள்
பம்பிப்பணைவிதமோலிடப்பணியோலிடநடவா
நம்பிக்கினியுரையாடல நாமேயவனுடலம்
கம்பித்திடப்பொருதாவியுங் கவர்வோமெனக்கழறா.

     (இ-ள்.)நம்பிக்கு இனி உரையாடலம்-நமது தலைவனானகுபேரனுக்கு
இப்பொழுது (இச்செய்தியை நாம்) கூறித் தெரிவியாமல், தும்பி குலம்-
யானைக்கூட்டமும்,இரதம் தொகை-தேர்க்கூட்டமும், துரகம் திரள் -
குதிரைக் கூட்டமும், காலாள்-பதாதிக்கூட்டமும், (ஆகிய நால்வகைச்
சேனையும்),பம்பி (சுற்றிலும்) நெருங்கி, பணைவிதம் ஓலிட - பலவகை
வாத்தியங்கள் முழங்கவும், பணி ஓலிட - ஆபரணங்கள் ஒலிக்கவும், நம்ஏ
நடவா - நாமே சென்று, அவன் உடலம் கம்பித்திட பொருது -
அம்மனிதனது உடம்பு நடுங்கும்படி போர் செய்து, ஆவிஉம் கவர்வோம்-
அவனுயிரையும் வாங்குவோம்,'என கழறா-என்று,(மணிமான்) சொல்லி,(எ-
று.)-'கழறா'என்பது, மேற்கவியில் 'என்ன'என்பதனோடுமுடியும்.

    துரகம்-விரைந்துசெல்வது.  காலாள்-காலினால்நடக்கும் ஆட்படை.
பணி-செய்யப்படுவதென்னும் பொருளில் ஆபரணத்துக்குக் காரணவிடுகுறி.
பணி-பூமியைத் தாங்கும் மகாநாகமுமாம்.  உரையாடலம் நாமே கவர்வோம்-
உயர்வுபற்றிய தனித்தன்மைப்பன்மை.  நாமே, ஏ-பிரிநிலை. உரையாடலம்-
தன்மைப்பன்மை யெதிர்மறைத் தெரிநிலைமுற்றெச்சம்.        (522)

21.பண்ணார்படைநஞ்சேனையின்பரவைக்கதிபதியர்
எண்ணாயிரமியக்கேசருமிவன்மேலெழுகென்னத்
தண்ணார்மதிக்கவிகைத்திறற்சாலேந்திரன்முதலோர்
விண்ணாடரும்வெருவச்செருப்புரிவான்விரைவுற்றார்.

     (இ-ள்.)'பண்ஆர் படை-தொழில்முற்றிய ஆயுதங்களையுடைய,நம்
சேனையின்பரவைக்கு-நமது கடல்போலுஞ் சேனைக்கு,அதிபதியர் -
தலைவர்களாகிய,எண்ணாயிரம்இயக்கேசர்உம் - எட்டு ஆயிரம்
யக்ஷசிரேஷ்டர்களும், இவன்மேல் எழுக-இம்மனிதன்மீது (போருக்கு)
எழக்கடவர்',என்ன-என்று (மணிமான்) கட்டளையிட,-தண் ஆர் மதி
கவிகை-குளிர்ச்சிமிகுந்த சந்திரன்போன்ற வெண்குடையையும், திறல்-
வலிமையையுமுடைய, சாலேந்திரன் முதலோர்-சாலேந்திர னென்பவன்
முதலான யக்ஷசேனாதிபதிகள்,விண்நாடார்உம் வெருவ -
தேவலோகத்தாரும் அஞ்சும்படி, செரு புரிவான் - போர் செய்யும்பொருட்டு,
விரைவுற்றார்- துரிதமாகச் சென்றார்கள்.

    சாலேந்திரன்-ஜாலங்களிற் சிறந்தவ னென்று பொருள்;ஜாலம்-
மாயவித்தை. கவிகை - கவிந்துள்ளது.  புரிவான் - வினையெச்சம். பண்
ஆர் சேனைஎன இயைத்து, அலங்காரம் பொருந்தின சேனை